Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 29 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச. விமல்
உலகின் கால்பந்து ஜாம்பவான் பிரேசில் அணி இடம்பிடித்துள்ள குழு E. எனவே இந்தக் குழு தானாகவே முக்கியம் பெறும். பிரேசில் அணியுடன் ஒப்பிடும் போது இந்தக் குழுவில் உள்ள மற்றைய அணிகள் பலம் குறைந்தவை. ஆனால் சுவிற்சலாந்து அணி தாங்கள் பிரேசில் அணிக்கு ஈடானவர்கள் என போட்டியினை சமன் செய்ததன் மூலம் நிரூபித்தார்கள். பிரேசில் அணி இம்முறை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமுள்ள அணியாக காணபப்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் சமநிலை முடிவு சிறிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஜேர்மனி அணி தடுமாறிய போது அவர்கள் எவ்வாறாவது இரண்டாமிடத்தை பிடிப்பார்கள். இரண்டாம் சுற்றில் பிரேசில் மற்றும் ஜேர்மனி அணிகளுக்கிடையிலான போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அது இல்லாமல் போயுள்ளது. பிரேசில் அணி குழு நிலையில் முதலிடத்தை பெற்றுள்ள போதும் அவர்களின் திறமைக்கு இலகுவாக கிடைத்த முதலிடமாக இதனை கருத முடியாது. கொஸ்டரிகா அணியுடன் நிச்சயமான சமநிலை முடிவென இருக்க போட்டி நிறைவடைய சில நிமிடங்கள் மாத்திரம் இருந்த வேளையில் இரண்டு கோல்களை அடுத்தடுத்து அடித்து தப்பித்துக்கொண்டார்கள். எனவே அவர்கள் மீது அழுத்தமில்லாமல் இல்லை. சேர்பியா அணியுடன் ஓரளவு இலகுவான வெற்றி கிடைத்தது.
உலகின் சிறந்த வீரர்களில் சம காலத்தில் மூன்றாமிடத்திலுள்ள நெய்மர் பிரேசில் அணிக்காக விளையாடுகிறார். இது அவர்களுக்கு பலம். பிரேசில் அணி தென்னமெரிக்க அணி. இரண்டாம் சுற்றில் மெக்சிகோ அணியினை சந்திக்கப்போகிறர்கள். மெக்சிகோ அணி மத்திய அமெரிக்க அணி. அமெரிக்க கண்ட அணிகளுக்கான மோதலாக இது அமையப்போகிறது. மெக்சிகோ அணியும் இம்முறை பலமாக காணப்படுவதனால் பிரேசில் அணி இலகுவாக இந்தப் போட்டியில் வெல்ல முடியாது. விறுவிறுப்பான போட்டியினை எதிர்பார்க்க முடியும். ஜேர்மனி அணி வெளியேறியதனை தொடர்ந்து இம்முறை உலகக்கிண்ணத்தை வெல்லும் முதல் வாய்ப்பு பிரேசில் அணிக்கு இருப்பதாக பந்தயக்காரர்கள் தங்கள் எதிர்வுகூறல்களை வெளியிட்டுள்ளனர். அது சாத்தியமா இல்லையா என்பதனை இந்தப் போட்டியின் மூலம் தீர்மானிக்க முடியும்.
இந்தக் குழுவிலிருந்து இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகிய மற்றைய அணி சுவிற்சலாந்து. இம்முறை பலமான அணியாகவே சுவிற்சலாந்து அணி காணப்படுகிறது என்பதனை அடுத்த சுற்றுக்கு தெரிவானதன் மூலம் நிரூபித்துள்ளார்கள். பிரேசில் அணியுடன் சமநிலை முடிவினை பெற்றதன் மூலம் அவர்களின் பலம் தெரியவந்தது. ஆனால் கொஸ்டரிக்கா அணியுடன் இறுதிப் போட்டியில் சமநிலையில் நிறைவு செய்தமையின் மூலம் தடுமாறுகிறார்களோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அடுத்த சுற்று வாய்ப்புகளை ஏற்கனவே ஓரளவு இலகுபடுத்தி வைத்திருந்தமையினால் இரண்டாம் சுற்றுக்கு இலகுவாக தெரிவானார்கள். ஆனால் தற்போது சுவீடன் அணியினை சந்திக்க போகின்றார்கள். சுவீடன் அணி ஜேர்மனி அணியினை வென்று பலமான நிலையில் அடுத்த சுற்றுக்கு வந்துள்ளார்கள். எனவே சுவிற்சலாந்து அணி காலிறுதிப் போட்டிகளுக்கு செல்ல மிகப்பெரியளவில் போராட வேண்டும். 1954 ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர்கள் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றின் மூன்றாம் கட்டப்போட்டிகள் ஆரம்பிக்கும் வேளையில் பிரேசில், சுவிற்சலாந்து மற்றும் சேர்பியா அணிகளுக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையிலேயே போட்டிகள் ஆரம்பித்தன. முதற் போட்டியில் சேர்பியா அணி கொஸ்டரிக்கா அணியினை வெற்றி பெற்றதன் மூலம் தமக்கான வாய்ப்பினை உருவாக்கியவர்கள் சுவிற்சலாந்து அணியுடன் தோல்வியடைந்ததன் மூலம் வாய்ப்புகள் குறைவு என்ற நிலையை உருவாக்கினார்கள். ஏனெனில் பிரேசில் அணியினை வெற்றி பெறுவது கடினமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. உலககிண்ண தொடருக்கு வருவதும் போவதுமா உள்ள இவர்கள் 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை இரண்டாம் சுற்றுக்கு தெரிவானதில்லை.
2014 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரின் காலிறுதிப்போட்டிகளுக்கு தெரிவான கொஸ்டரிக்கா அணி இம்முறை முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளது. முதலிரு போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்ததன் மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தவர்கள், சுவிற்சலாந்து அணியுடன் 2-2 என்ற சமநிலை முடிவினை பெற்றுக்கொண்டார்கள். ஒரு ஆறுதல் முடிவுடன் நாடு திரும்பினாலும், கடந்த உலகக்கிண்ண தொடரில் காலிறுதி வரை முன்னேறிய அணி குறைந்தது இரண்டாம் சுற்றுக்கு கூட தெரியவாகவில்லை என்பது அவர்களுக்கு பின்னடைவே.
புள்ளி விபரம்
1 பிரேசில் 3 2 1 0 5 1 4 7
2 சுவிட்சர்லாந்து 3 1 2 0 5 4 1 5
3 செர்பியா 3 1 0 2 2 4 -2 3
4 கொஸ்டரிக்கா 3 0 1 2 2 5 -3 1
(அணி, போட்டிகள், வெற்றி,சமநிலை, தோல்வி, அடித்த கோல்கள், வாங்கிய கோல்கள், கோல் வித்தியாசம், புள்ளிகள்)
போட்டி முடிவுகள்
கொஸ்டரிக்கா vs செர்பியா 0 - 1
பிரேசில் Vs சுவிட்சர்லாந்து 1 - 1
பிரேசில் Vs கொஸ்டரிக்கா 2 - 0
செர்பியா Vs பிரேசில் 0 - 2
சுவிட்சர்லாந்து Vs கொஸ்டரிக்கா 2 – 2
இரண்டாம் சுற்றுப் போட்டிகள்
ஜூலை 02 - 19.30, பிரேசில் எதிர் மெக்சிகோ
ஜூலை 03 - 19.30, சுவீடன் எதிர் சுவிற்சலாந்து
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago