Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 10 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ச.விமல்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நியூசிலாந்து அணியை அடித்து துவைத்து அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்று மிகப்பெரிய மீள் வருகையை காட்டியுள்ளனர். அவுஸ்திரேலியா அணி, நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என வெள்ளையடிப்பு செய்து வெற்றி பெற்றுளளது. இது அவர்களுக்கான வெற்றி மட்டுமல்ல. மிக அபாரமான மீள் வருகை. அவுஸ்திரேலியா அணி அவர்களின் பாணியில் தங்கள் மீள் வருகையை மேற்கொண்டுள்ளளது. தங்கள் நாட்டில் வெற்றி பெற்றாலும் கூட நியூசிலாந்த்து அணி பலமில்லாத அணி இல்லை. மிகவும் பலமான அணி. அயல் நாட்டு அணி. மைதான நிலைமைகள், காலநிலை என்ற புறக்காரணிகள் தாக்கம் செலுத்தும் எனக்கூறி விட முடியாது. இந்த தொடர் வெற்றியானது அவுஸ்திரேலியா அணிக்கு பலத்தை வழங்கும். மனதளவில் மீள் வருகையை ஏற்படுத்தி மனபலத்தை அதிகரிக்கும்.
அவுஸ்திரேலியா அணி இந்த தொடரில் வெற்றி பெற்றாலும் கூட துடுப்பாட்டம் இன்னமும் அணியாக ஒருமித்து முன்னேற்றமைடைய வேண்டும். வோணர், ஸ்மித் ஆகியோரே இந்த வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர். இவர்கள் தனித்து நின்று பெற்றுக்கொடுத்த ஓட்டங்களே வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளன.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு பலமானது. ஆனால் இந்த தொடரில் அவர்களின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை.முதலிரு போட்டிகளிலும் 300 ஓட்டங்களை தாண்டிய அவுஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் 250 ஓட்டங்களை தாண்டியது. முதலிரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் ஓரளவு சிறப்பாக அமைந்தது. 250 ஓட்டங்களை தாண்டியிருந்தாலும் கூட அவுஸ்திரேலியா அணி பெற்ற ஓட்டங்களை தாண்ட முடியவில்லை. பந்துவீச்சில் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் நியூசிலாந்து அணி வெற்றியினை யோசித்திருக்க முடியும். மூன்றாவது போட்டி நடைபெற்ற மைதானம் கடந்த போட்டிகள் போன்று இல்லாமல் ஓட்டங்களை பெறுவதற்கு கடினமான மைதானம். அதற்கு ஏற்றால் போல ஓட்டங்களும் குறைந்தன. ஆனாலும் நியூசிலாந்து அணியின் ஓட்டங்களும் மிக மோசமாகவும் குறைந்தன.
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சு, குறிப்பாக வேகப்பந்துவீச்சு நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடித்துவிட்டது. ஆரம்ப விக்கெட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட்டமை நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கையை துரத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஓட்டங்களை வழங்கிவிட்டு பின்னர் துரத்தி அடித்தல் என்பது எல்லா வேளைகளிலும் சாத்தியமற்ற ஒன்று. அதுவும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக அது சாத்தியமற்ற ஒன்றே.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா அணி தமது முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இப்போதைக்கு முதலிடம் பறிபோகும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றது. இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் அனைத்துப்போட்டிகளிலும் வெற்றிபெற்று, அதேவேளை அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியுடன் மோசமான தொடர் தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே அவுஸ்திரேலிய அணி முதலிடத்தை இழக்கும். அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளன. நியூசிலாந்து அணி மூன்றாமிடத்தில் இருந்து நான்காமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுளள்து. மூன்று புள்ளிகளை இழந்து 109 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
முதலாவது போட்டி
அவுஸ்திரேலியா 324/8 (50 ஓவர்கள்)
ஸ்டீவன் ஸ்மித் 164, ட்ரெவிஸ் ஹெட் 52, மத்தியூ வேட் 38
மற் ஹென்றி 74/2(10), ட்ரெண்ட் போல்ட் 51/2(10), ஜேம்ஸ் நீஷம் 58/2(6)
நியூசிலாந்து 256/10 (44.2)
மார்ட்டின் கப்தில் 114, கொலின் மன்றோ 49, ஜேம்ஸ் நீஷம் 34
ஜொஷ் ஹேசில்வூட் 49/3(10), மிற்சல் மார்ஷ் 38/2(8.2), பற் கம்மின்ஸ் 62/2 (9), அடம் ஸாம்பா 66/2(10)
இரண்டாவது போட்டி
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 116 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியின் கூடுதல் ஓட்டங்களை பெற்ற டேவிட் வோணர் போட்டியின் நாயகன் விருதை பெற்றார்.
அவுஸ்திரேலியா 378/5 (50 ஓவர்கள்)
டேவிட் வோணர் 119, மிற்சல் மார்ஷ் 76 (ஆ.இ), ஸ்டீவன் ஸ்மித் 72, ட்ரெவிஸ் ஹெட் 57
டிம் சௌதி 63/2(10)
நியூசிலாந்து 262/10 (44.2)
கேன் வில்லியம்சன் 81,ஜேம்ஸ் நீஷம் 74, மார்ட்டின் கப்தில் 45
பற் கம்மின்ஸ் 41/4 (10), ஜொஷ் ஹேசில்வூட் 42/2(9), மிற்சல் ஸ்டார்க் 52/2(10), ஜேம்ஸ் போக்னர் 69/2(8.2)
மூன்றாவது போட்டி
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி ,முதலில் துடுப்பெடுத்தாடி 117 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் டேவிட் வோணர் தெரிவானார்.
அவுஸ்திரேலியா 264/8 (50 ஓவர்கள்)
டேவிட் வோணர் 156, ட்ரெவிஸ் ஹெட் 37
ட்ரெண்ட் போல்ட் 49/3(10), மிற்சல் சான்ட்னெர் 45/2(9), கொலின் டி கிரான்ட்ஹோம் 50/2(10)
நியூசிலாந்து 147/10 (36.1)
மார்ட்டின் கப்தில் 34, டொம் லேதம் 28
மிற்சல் ஸ்டார்க் 34/3(10) பற் கம்மின்ஸ் 26/2 (5.1), ஜேம்ஸ் போக்னர் 26/2(7), ட்ரெவிஸ் ஹெட் 37/2(7)
தொடரில் 100ஓட்டங்களை தாண்டிய துடுப்பாட்ட வீரர்கள்
டேவிட் வோணர் 3 3 299 156 99.66 109.92 2 0
ஸ்டீவன் ஸ்மித் 3 3 236 164 78.66 98.33 1 1
மார்ட்டின் கப்தில் 3 3 193 114 64.33 110.28 1 0
ட்ரெவிஸ் ஹெட் 3 3 146 57 48.66 90.12 0 2
ஜேம்ஸ் நீஷம் 2 2 108 74 54.00 90.75 0 1
கேன் வில்லியம்சன் 3 3 103 81 34.33 95.37 0 1
(போட்டிகள், இனிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ரைக் ரேட், சதங்கள், அரைச்சதங்கள்)
தொடரில் நான்கு விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்
பற் கம்மின்ஸ் 3 3 24.1 129 8 4/41 16.12 5.33 18.1
ஜொஷ் ஹேசில்வூட் 3 3 26.0 113 6 3/49 18.83 4.34 26.0
மிற்சல் ஸ்டார்க் 3 3 27.0 123 6 3/34 20.50 4.55 27.0
ட்ரெண்ட் போல்ட் 3 3 30.0 180 6 3/49 30.00 6.00 30.0
ஜேம்ஸ் போக்னர் 2 2 15.2 95 4 2/26 23.75 6.19 23.0
(போட்டிகள், இனிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம், ஸ்ரைக் ரேட்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
24 minute ago
52 minute ago