Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 13 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக பிபிசியினால் தயாரித்து வெளியிடப்பட்டுள்;ள பாலியல் கல்வி வீடியோவானது ஆபாச நீலப்படம் போன்றுள்ளது என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ் வீடியோ பிள்ளைப்பராயத்தின் அப்பாவித் தனத்தை சீரழிக்கின்றது என அவர் விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ 9 முதல் 11 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கு வாழ்க்கை சுழற்சி, உணர்வுகள், குடும்ப வாழ்க்கை, நட்பு போன்றவற்றை கற்பித்துக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டது.
ஆனால், அவ்வீடியோவில் இரண்டு கார்ட்டுன் பாத்திரங்கள் செக்ஸில் ஈடுபடும் காட்சி மற்றும்ஜோடியொன்று செக்ஸில் ஈடுபடுவது தொடர்பான கணினியின் மூலம் வரையப்பட்ட காட்சிகள், வரைபட விளக்கங்கள் என்பன அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆண்கள், பெண்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் காட்டுவதற்காகவும் நிர்வாண நிலையிலான ஆணும் பெண்ணும் பயன்படுத்தப்பட்டுளனர். அவர்களின் ஆசைகள், சுய இன்பம், பாலியல் உறுப்புகள் தொடர்பிலான விளக்கப்படங்கள் என்பன அவ்வீடியோவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அன்ரியா லீட்சம் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், இந்த வீடியோ மிக வெளிப்படையாக உள்ளது. இது பிள்ளைப் பராயத்தின் அப்பாவித்தனத்தை சீரழிக்கின்றது என விமர்சித்துள்ளார்.
இவ்வீடியோ குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அன்ரியா லீட்சம் நாடாளுமன்றத்திலும் விவாதித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அது பார்ப்பதற்கு நீலப்படத்தை போன்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வீடீயோவில் உள்ள கணினியினால் வரையப்பட்ட உடலுறவுக் காட்சியைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். இவ்வீடியோ தொடர்பில் தம்முடன் ஆலோசிக்கப்பட்டதாக பெற்றோர்கள் கருதுவில்லை.
எனது மகனுக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இவ்வீடியோக காண்பிக்கப்பட்டது. இது பிபிசியினால் தயாரிக்கப்பட்டது என எனக்கு கூறப்பட்டது. பிபிசியினால் தயாரிக்கப்பட்டதென்றால் பரவாயில்லை என பொதுவாக எதிர்பார்ப்பீர்கள். ஆனால் நான் அந்த வீடியோவை பார்த்தபோது அதிர்ச்சியடைந்துவிட்டேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதாக பிரித்தானிய கல்வி அமைச்சர் நிக் கிப் உறுதியளித்துள்ளார்.
எனினும் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் கல்வி நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த வீடியோவை தயாரித்தாக பிபிசி தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வயதுப் பிரிவினருக்கும் ஏற்ற விதத்திலேயே தமது பாட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதாக பிபிசி கூறியுள்ளது.
pithamahan Sunday, 15 January 2012 08:13 PM
இதல்லாம் வெள்ளைக்காரர்களுக்கு சகஜம்...
Reply : 0 0
UMMPA Tuesday, 17 January 2012 07:07 PM
பெற்றார்கள் நடந்துகொள்வதும் இ வீதிஇ பொது போக்குவரத்து வாகனங்களில் எங்கு பார்த்தாலும் மிருகங்களைப்போல் அநாகரிகமாக நடப்பதை காணலாம் . இதனைப்பார்க்கும் சிறார்கள் என்ன செய்யமுடியும் தாங்களும் முயற்சிது வெற்றி காண்கிறார்கள் அதன் வெளிப்பாடு ...................????????????
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago