Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1652 இறாத்தல் (சுமார் 750 கிலோ) நிறையுடைய பாரிய பூசணிக்காயொன்று பிரிட்டனில் விளைந்துள்ளது.
கடந்த 6 வாரங்களாக தினமும் 36 கிலோவினால் அதன் எடை அதிகரித்து வருகிறது.
இப்பூசணிக்காயானது இவ்வாரம் ஏற்கெனவே இரண்டு சாதனைகளை முறியடித்துள்ளது.
17 அடி அங்குலமும் 1652 இறாத்தல் நிறையுடைய இப்பூசணிகாய், பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது. விரைவில் இது உலகின் மிகப்பெரிய பூசணிக்காயாக பதிவு செய்யப்படும் அளவுக்கு அதன் எடை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உலக சாதனைப் புத்தக்தில் இடம்பெற்ற பூசணிக்காயின் நிறை 1,725 இறாத்தலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைச் சகோதரர்களான இயன் பட்டன் மற்றும் ஸ்டுவர்ட் பட்டன் (வயது 49) என்பவர்களே இப் பிரமாண்ட பூசணிக்காயிணை வளர்த்துள்ளனர். இவர்கள் கடந்த 30 வருடங்களாக பூசணிக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இயன் குறிப்பிடுகையில், "உலக சாதனையை நிலைநாட்ட வேண்டுமென நாங்கள் விரும்பினோம். நாங்கள் அதனைப் அடைந்து கொண்டிருக்கிறோம். இது எங்களது அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும் எனக் கருதுகிறோம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago