Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜனவரி 15, புதன்கிழமை
Editorial / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு பெண்களைத் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக வாழ்ந்துவரும் இளைஞர் ஒருவருக்குப் புதிதாக ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இதுகுறித்த செய்தி தற்போது சமூகவலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில் இந்தத் தகவலைப் பார்த்த 90ஸ் கிட்ஸ்கள் பலரும் தங்களது சலிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியில் வசித்துவரும் 37 வயதான இளைஞர் ஆர்தர் ஓ உர்லோ. இவர் தற்போது 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இந்த உறவுகளைத் தவிர ஏற்கெனவே ஆர்தர் சில பெண்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு பிரிந்து இருக்கிறார். அந்த வகையில் இதுவரை அவருக்கு 10 திருமணங்கள் நடைபெற்றதாகக் குறிப்பிடுகிறார். மேலும் பழைய திருமண உறவின் மூலம் 10 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி உல்லாசமாக வாழ்ந்துவரும் ஆர்தருக்கு ஒரு புதிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம்.
அதாவது தனக்கு ஆறு மனைவிகள் இருக்கும் நிலையில் ஒவ்வொரு பெண் மூலமும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள அவர் நினைக்கிறாராம். ஆனால் இந்த ஆறு பெண்களில் யாரை முதலில் கர்ப்பம் ஆக்குவது என்றுதான் அவருடைய தலையாய பிரச்சனையாகத் தற்போது மாறியுள்ளது.
இதுகுறித்து ஒரு முடிவெடுக்க முடியாத ஆர்தர், ஒருவேளை ஒரு பெண் மட்டும் கர்ப்பம் அடைந்தால் மற்ற மனைவிகள் வருத்தப்படுவார்கள் என்றும் நினைத்திருக்கிறார். இதனால் குழந்தை விஷயத்தில் படு குழப்பம் அடைந்த ஆர்தர் தற்போது இப்பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டுபிடித்திருக்கிறார்.
அதாவது முதல் மனைவியின் கரு முட்டையை வைத்துக்கொண்டு வாடகைத்தாய் மூலம் முதலில் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்று ஆர்தர் முடிவுசெய்துள்ளார்.
இதற்காக வாடகைத் தாயைத் தேடும் படலத்தையும் அவர் ஆரம்பித்துவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து 6 மனைவிகளுக்கும் 6 குழந்தைகள் என்று தனது திட்டத்தை முழுமையாக முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளாராம்.
இப்படி 6 மனைவிகள் 6 குழந்தைகள் என்று விறுவிறுப்பாகச் செயல்பட்டு வரும் ஆர்தருக்கு உண்மையில் 10 பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்கள் மூலம் 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே தனது கனவு திட்டம் என்றும் கூறிவருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
2 hours ago
2 hours ago