2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

5000 முறை திருமணம் முடித்த அதிர்ஷ்டக்காரர்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 20 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். 47 வயதான நபர் ஒருவர், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை திருமணம் முடித்த சம்பவமொன்று இந்தியாவின் சட்டீஸ்கரில் இடம்பெற்றது.

சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது நபர். கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.

கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ. 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார். கிடைக்கும் பணத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 ஆயிரமும், தனக்கு ரூ 25 ஆயிரமும் என பங்கிட்டுக்கொண்டுள்ளனர்.

பல திருமணங்களில் அதிகாரிகளின் சாட்சிக் கடிதத்தை அவர் போலியாக தயாரித்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் பொலிஸார். ராஜ்நண்டன் பகுதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள விஜய் மீது இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 420, 467 மற்றும் 468இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது விஜயிடம் விசாரணை நடத்தி வரும் பொலிஸார், விசாரணையின் முடிவில் அவரது திருமணங்களின் எண்ணிக்கை கூடவும், குறையவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • mi Sunday, 29 September 2013 06:00 PM

    mudiyalappa..eppadi ?

    Reply : 0       0

    Ahsan Sunday, 06 October 2013 01:09 PM

    ?????ஒன்னுமே புரியல???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .