Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜூன் 25 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வயதான குழந்தையொன்று எவரினதும் துணையில்லாமல், பயணிகளுடன் பயணியாக 28 மைல் (45 கிலோமீற்றர் ) தூரம் பொதுப்போக்குவரத்து பஸ் ஒன்றில் பயணம் செய்த பிரிட்டனில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேல்ஸ் பிராந்தியத்திலுள்ள மொன்ட்கொமரியில் ஏனைய பயணிகளுடன் இக்குழந்தை பஸ்ஸில் ஏறியுள்ளது.
அந்த பஸ், 52 நிமிடங்களின் பின்னர் ஷ்ரூபரி நகரிலுள்ள அதன் கடைசி தரிப்பிடத்தை சென்றடையும்வரை அதில் குழந்தையொன்று எவர் துணையுமின்றி; பயணித்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
பயணிகள் அனைவரும் அது பஸ்ஸில் பயணிக்கும் சக பயணிகள் எவரினதும் குழந்தையாக இருக்கலாம் எனக் கருதியிருந்தாக குறித்த பஸ்ஸை இயக்கும் டானெட் வெலி கோச்சஸ் அன்ட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடைசி பயணிகள் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பஸ்ஸின் சாரதி குழந்தையொன்று பஸ்ஸில் இருக்கிறது என அப்பயணிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது பயணிகள் அனைவரும் "அது என்னுடைய குழந்தையில்லை" எனத் தெரிவித்தனராம். அவ்வேளையிலேயே குழந்தை தனியாக பயணித்துள்ளது என்பது உணரப்பட்டது.
2 வயதான மேற்படி ஆண்குழந்தையிடம் அழுகையோ எவ்வித அச்சமோ காணப்படவில்லை. அக்குழந்தை மகிழ்ச்சியுடன் பயணிப்பதாக தென்பட்டது என மேற்படி பேச்சாளர் தெரிவித்துள்ளார். இப்பயணத்தின்போது அக்குழந்தை பிஜாமா மற்றும் நெப்பி என்பற்றை மட்டுமே அணிந்திருந்தது.
இது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago