2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

4 லட்சம் ரூபா ஆடையை 3 நாட்களாக உள்ளாடைக்குள் ஒளித்து வைத்திருந்த பெண்

Kogilavani   / 2011 ஜூன் 22 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்ணொருவர் கடையொன்றில் விலை உயர்ந்த தோலிலர் ஆடையொன்றைத் திருடி தனது உள்ளாடைக்குள் 3 நாட்கள் மறைத்து வைத்தச் சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டெபனி மோர்லன்ட் (வயது 46) என்ற பெண்ணே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு அகப்பட்டுள்ளார்.

இவர் பூமிங்கன் நகரில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் சுமார் 7 லட்சம் ரூபா பெறுமதியுள்ள கோட் ஒன்றை திருடியதாக கடை ஊழியர் ஒருவரினால் பொலிஸாரிடம் புகாரிடப்பட்டது.

மேற்படி பெண்ணின் காரை பொலிஸார் சோதனைக்குட்படுத்தினர். கோர்ட் கொளுவுவதற்குரிய ஹங்கர் காணப்பட்டது. ஆனால் கோட் இல்லை.  சந்தேகத்தின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அதிகாரிகள் 3 நாட்களாக அவரிடம் விசாரணைகளையும் மேற்கொண்டனர். மெட்டல் டிடக்டர் மூலம் சோதனையும் செய்தனர். ஆனால் திருடப்பட்டதாக கூறப்படும் கோர்ட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் 3 நாட்களின் பின் இறுதியாக தனது ஆடைகளை தளர்திய அவர் உள்ளாடைக்குள்ளிருந்து அந்த கோட்டை வெளியே எடுத்தார்.

இத்திருட்டுக்காக அவர் தனது உள்ளாடையை பல்வேறு மாற்றத்திற்குட்படுத்தியிருந்ததாக பூமிங்டன் பொலிஸ் கட்டளை அதிகாரி மார்க் செத்லிக் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .