Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 18, புதன்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டத்தரணிகளுக்கு வாதிக்கும் திறமை இருக்குமாயின், எந்தவொரு வழக்காக இருந்தாலென, தீர்ப்பை தம்பக்கத்துக்கு சாதகமாக்கிக்கொள்வர். எனினும், உயர்நீமன்றத்தில் 26 வழக்குகளில் வாதாடி வழக்கை வென்ற சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இங்கல்ல, கென்யாவிலேயே இடம்பெற்றுள்ளது.
கென்யா உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிரையன் முவெண்டா என்ற போலி வழக்கறிஞரை கென்யா பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கென்யா பகுதியை சேர்ந்தவர் பிரையன் முவெண்டா இவர் அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். பிரையன் திறம்பட செயல்பட்டதால் அவர் பங்கேற்ற 30 வழக்குகளில் 26 வழக்குகளை திறம்படி வாதாடி வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சில வழக்கறிஞர்கள் பிரையனின் சான்றிதழ் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கென்யா பொஸார் கைது செய்தனர்.
அவர் வாதாடி வெற்றிப் பெற்ற வழக்குகளை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கென்யா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
25 minute ago
30 minute ago