2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

26 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த தபால்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்ட தபால் அட்டை ஒன்று தற்போது சரியான விலாசத்துக்கு வந்தடைந்த சம்பவம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வியக்ஸ் பவுக்காவ் என்ற நகரில் வசிக்கும் குயிட்டரி டாரியோ என்ற பெண் தனது வீட்டில் இருக்கும் தபால் பெட்டியை திறந்துள்ளார். அதில் புதியதாக தபால் ஓன்று வந்திருப்பதை அந்த பெண் பார்த்துள்ளார். தபாலில் விவரத்தை பார்த்த அவருக்கு ஒரு நிமிடம் தலை சுற்றியது.

அந்த தபால் நான்ஸி என்னும் நகரில் இருந்து 1993ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட அந்த தபால் தற்போது கிடைத்துள்ளதை நினைத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 26 ஆண்டுகள் ஆகியும் அந்த தபால் அட்டை கிழியவோ அல்லது பழையதாகவோ ஆகாமல் பார்ப்பதற்கு புதிதாகவே இருந்துள்ளது. வீட்டின் முகவரி மாறி இருந்ததால் ஏற்பட்ட குழப்பமே இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X