2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

25 கிலோகிராம் நிறையில் 'கேக்' திருமண ஆடை

Kogilavani   / 2013 மார்ச் 03 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமார் 25 கிலோகிராம் நிறைகொண்ட பெண்களுக்கான திருமண ஆடை ஒன்று கேக் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரமிங்கடனில் நடைபெறவுள்ள திருமண ஆடைகளின் கண்காட்சியில் இக் கேக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 6 அடி உயரம்கொண்ட இந்த கேக் 22 கிலோகிராம் சர்க்கரை பேஸ்ட் ஐஸ்கிரிம், 2 இறாத்தல் ரோயல் ஐசிங், மற்றும் சர்க்கரையிலான நூற்றுக்கணக்கான முத்துக்கள் ஆகியவற்றைக் கொண்டு வடிமைவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கேக்கானது சுமார் 2,000 பேர் உண்ணக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கேக்கை டொன்னா மிலிங்டன் டே என்பவரே வடிமைவமைத்துள்ளார்.

டொன்னாவின் மகள் ஹன்னா கேக்கிலான மிகப்பெரிய திருமண ஆடை ஒன்றை ஓவியமாக வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த டொன்னா தேசிய திருமண ஆடை கண்காட்சிக்காக இதனை கேக்காக வடிவமைத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .