Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
George / 2015 ஜூலை 03 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்பியூசன் என்பது எல்லோருக்கும் வரலாம் இது எப்ப வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மையறியாமல் வந்து விடும். நாள்தோறும் நடக்கும் சில விடயங்கள் நமது கவனயீனத்தால் நடக்கலாம் அல்லது நம்மையறியாமல் நடந்துவிடலாம்.
இப்படிதாங்க கன்பியூசன்ல தமது கணவன்களை இரண்டு பெண்கள் மாற்றிய சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள தாராபுரம் சின்னபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 50). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (42). இவர் நேற்று தாராபுரம் ஐந்துமுக்கு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
வெள்ளை சட்டை அணிந்து ரங்கசாமி தலைகவசம் அணிந்து இருந்தார். ஏரிபொருள் நிரப்பவதற்காக மனைவியை இறக்கி விட்டார்.
அப்போது காளிபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி முத்துச்சாமி (45) தனது மனைவி பொன்னாத்தாளுடன் மோட்டார் சைக்கிளில் அதே எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு வந்துள்ளார்.
அவரும் வெள்ளை சட்டையும், ஒரே கலர் தலைகவசம் மற்றும் ரங்கசாமி வைத்து இருந்த அதே நிறுவனத்தை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வைத்து இருந்துள்ளார்.
பொன்னாத்தாள் கணவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பழனியம்மாளின் அருகே நின்று கொண்டாராம்.
ஏரிபொருள் நிரப்பிவிட்டு வந்த ரங்கசாமியின் மோட்டார் சைக்கிளில் முத்துசாமியின் மனைவி பொன்னாத்தாள் அடையாளம் தெரியாமல் ஏறிக் கொண்டார். அதேபோல் முத்துச்சாமியின் மோட்டார் சைக்கிளில் ரங்கசாமியின் மனைவி பழனியம்மாள் ஏறியுள்ளார்.
பின்னர், ரங்கசாமி பொள்ளாச்சி ரோட்டில் மேற்கு நோக்கி சின்னபுத்தூருக்கு செல்ல, முத்துச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் பழனியம்மாளுடன் கரூர் ரோட்டில் கிழக்கு நோக்கி காளிபாளையத்துக்கு பயணித்துள்ளார்.
தாராபுரம் 5–முக்கில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரம் சென்ற பிறகு ரங்கசாமியின் மனைவி பழனியம்மாளுக்கு தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருவது தனது கணவர் ரங்கசாமி தானா? என்று சந்தேகம் எழுந்தது. ( நல்லா வந்துச்சு சந்தேகம்!) உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஹெல்மெட்டை கழற்றும்படி கூறியுள்ளார்.
அப்போது முத்துச்சாமிக்கு தன்னுடன் பேசுவது தனது மனைவியின் குரல் இல்லையே? என்ற சந்தேகம் எழுந்தது. மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருவரும் சரிபார்த்த போது அதிர்ச்சியடைந்து அல்லோலகல்லோலப்பட்டுள்ளனர்.
கணவனை காணாது பழனியம்மாளும், மனைவியை காணாது முத்துச்சாமியும் பரிதவித்ததுடன் எங்கே தவறிப் போனார்கள் என்று தெரியாமல் சில நிமிடங்கள் திகைத்து போயுள்ளனர்.
உடனே பழனியம்மாள் தன்னுடன் வந்த முத்துச்சாமியின் அலைபேசியை வாங்கி தனது கணவர் ரங்கசாமிக்கு அழைப்பு மேற்கொண்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சின்னப்புத்தூர் சென்று கொண்டு இருந்த ரங்கசாமி அலைபேசியை எடுத்து பேசினார்.
எதிர்முனையில் மனைவியின் குரல் கேட்டு அதிர்ச்சியடைந்தார். தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வருவது யார் என்று தெரியாமல் குழம்பிப்போனார்.
(ஒருவேளை தன்பின்னால் அமர்ந்து வருவது பேயோ??? ஐயய்யோ என்று நினைத்திருப்பார் போல)
இதேபோல் அலைபேசியில் பேசிய ரங்கசாமியின் குரல் கேட்டு பொன்னாத்தாளும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் பழனியம்மாள் தனது கணவரிடம் நடந்த விவரத்தை கூறி தாராபுரம் டவுன் ஹோலுக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி ரங்கசாமியும், முத்துச்சாமியும் டவுன் ஹோலுக்கு வந்தனர். அங்கு இருவரும் தங்களது மனைவிமார்களை சரியாக அழைத்து சென்றுள்ளனர்.
(தெரிஞ்சு செஞ்சாங்களா? தெரியாம செஞ்சாங்களா? ஓரெ கன்பியூசனுங்கோ..!)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
26 minute ago
36 minute ago