2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பரீட்சை அனுமதி அட்டையில் நாயின் படம்

Thipaan   / 2015 ஜூன் 28 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரீட்சை அனுமதி அட்டையில்  தனது புகைப்படத்துக்கு பதிலாக நாயின் புகைப்படம் இருந்ததைக்கண்டு மாணவரொருவர் அதிர்ச்சியடைந்த சம்பவம் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐ.டீ.ஐ நுழைவுப் பரீட்சைக்கான அனுமதி அட்டையை உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முயன்றபோதே சௌமியதிப் மஹாடோ (வயது 18) தனது படத்துக்கு பதிலாக நாயின் படம் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த பகுதியில் பரீட்சைகள் நடத்தும் ஒருங்கணைப்பு அதிகாரியை தொடர்பு கொண்டு இவ் விடயம் தொடர்பில் சௌமியதிப் மஹாடோ தெரிவித்ததையடுத்து, நாயின் படம் நீக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில சபைக்கு கீழுள்ள தொழிற்பயிற்சி போது நுழைவுப்பரீட்சை எழுதுவதற்கு மஹாடோவுக்கு புதிய அனுமதியட்டை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன், இந்த வருடம் தனது உயர்தர படிப்பை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகளை நடத்தும் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X