2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

குமரிகளுடன் கொஞ்சி விளையாடும் நாய்கள்

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதமரைக் கேட்டால், தான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறுவார். அலுவலகத்தில் எளிமையான வேலைகளைச் செய்யக்கூடிய கடைநிலை ஊழியரைக் கேட்டால், அவரும் தான் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறுவார்.

இவர்களின் மன அழுத்தங்களை போக்குவதற்கு யாரால் என்ன செய்ய முடியும். இது அவ்வாறிருக்கையில், இங்கிலாந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உதவும் வகையில் நாய்க்குட்டிகளுடன் கொஞ்சி விளையாட தனி அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இங்கிலாந்தின் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நெருங்கி வருகின்றதாம். எனவே மாணவர்கள் நீண்ட நேரம் நூலகம், கணினி முன் அமர்ந்து படிப்பதால் பல நேரங்களில் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இதனை தவிர்ப்பதற்காக பல்கலைகழகத்தில் தனியாக நாய்க்குட்டிகளை கொண்ட தனி அறையை வடிவமைத்துள்ளனர் மாணவ சங்கத்தினர்.

நாய்க்குட்டிகளுடன் விளையாடுவதற்கு 1.5 பவுண்ட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை முழுவதும் பொது சேவைக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாய்க்குட்டிகளுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படும் எனவும் மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

சமீபத்தில் ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வில், நாய்கள் உட்பட செல்லப் பிராணிகளை கொஞ்சும்போது மனிதர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதாக தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X