Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாரேனும் உயிரிழந்து விட்டால் அவரது கடைசி ஊர்வலத்தின் போது, அவரது சடலம தாங்கிய சவப்பெட்டியை ஆடாமல் அசையாமல் கொண்டு செல்வதுண்டு. இதனை அநேகமாக நீங்களும் பார்த்திருக்கலாம்.
ஆனால், அவ்வாறான இறுதி ஊர்வலமொன்றின் போது, சவப்பெட்டி உடைந்து சடலம் கீழே விழுந்தது கூட தெரியாமல் பெட்டியை மட்டும் தூக்கிச் சென்ற கேளிக்கையான சம்பவம் அடங்கிய காணொலி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கிரமமொன்றில் நபரொருவர் இறந்துள்ளார். அவரது இறுதி ஊர்வலத்தின் போது சுமார் 7 பேர் சடலத்தை சவப்பெட்டியில் இட்டு தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். பாதி தூரம் போகும் போது சவப்பெட்டியின் கீழ்பகுதி உடைந்துள்ளதுடன் சடலம் வெளியே விழுந்துள்ளது.
இதை கவனியாத அந்த 7 பேரும் சவப்பெட்டியை மாத்திரம் தூக்கிக்கொண்டு பாதித்தூரத்துக்கு சென்றுவிட்டனர்.
இதனை அவதானித்த இறுதி ஊர்வலத்தின் பின்னால் வந்தவர்கள் கூச்சலிட்டு பெட்டியை தூக்கிச்சென்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் மீண்டும்; திரும்பி சென்று சடலத்தை எடுத்துக்கொண்டு சென்று நல்லடக்கம் செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .