2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனிதக்கழிவில் இயங்கும் பஸ்

Gavitha   / 2015 மார்ச் 18 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதக்கழிவை பயன்படுத்தி பொருட்களை அல்லது இயந்திரங்களை தயாரிக்க வேண்டும் என்று யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள். இந்த எண்ணத்தையே மாற்றுமளவுக்கு தற்போதுள்ள விஞ்ஞான யுகம் மாற்றமடைந்து விட்டது.

ஆம், மனிதக்கழிவினால் உற்பத்தி செய்யப்படும் வாயுவை கொண்டு இயங்கக்கூடியதான பஸ்ஸொன்று, தற்போது பிரித்தானியாவில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த பஸ், மனிதக்கழிவுகளையும் எச்சங்களையும் முற்று முழுதாக பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் வாயுவினால் இயக்கப்படுகின்றதாம்.

இதற்காக சுமார் 32,000 வீடுகளிலிருந்து மனிதக்கழிவுகள் எடுக்கப்படுகின்றதாம். இவற்றை பயன்படுத்தி இந்த பஸ் 15 மைல் தூரத்துக்கு ஓடக்கூடிய சக்தியை பெற்றுக்கொள்கின்றது.

கிழமை நாட்களில் நான்கு நாட்களுக்கு சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ள இந்த மனித கழிவு பஸ்ஸில், ஒரு தடவைக்கு 40 பேர் பயணிக்க முடியுமாம்.

இந்த பஸ்ஸை தயாரிப்பதற்கு முன்னர், பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த பஸ் குறிப்பிட்ட சில இடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது என்று, பஸ்ஸை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பஸ்ஸின் கேள்வி அதிகரிக்குமாயின், எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற பல பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .