Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மார்ச் 18 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதற்றமடைந்தாலோ, கோவமடைந்தாலோ அல்லது ஏதேனும் ஒன்றை நினைத்துக்கொண்டிருந்தாலோ, எதையாவது செய்யவேண்டும் என்று கைகள் பரபரக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், கை நகங்களை கடித்தல், கை விரல்களின் சதைகளை கடித்தல் அல்லது தலை முடியை கடித்தல் போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
ஆனால், இது ஒரு நோயென்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், 4 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து 4 அடி நீள முடியை அகற்றிய சம்பவம் இந்தியா, புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
தனது தலைமுடியை, தானே நூடில்ஸ் போல உட்கொண்டு வந்த அந்த சிறுவனுக்கு, வயிற்று வலி அதிகரிக்கவே, அவனை ஸ்கேன் செய்து பார்த்த போது, அவனுடைய வயிற்றில் முடி இருந்தது தெரியவந்துள்ளது.
தலைமுடியை உண்ணும் 'ரபுன்செல் சின்ட்ரோம்' என்ற விநோத உளவியல் நோயினால் இச்சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
இச்சிறுவன், கடந்த 9 மாதங்களாக இவ்வாறு தலைமுடியை உண்டு வந்துள்ளான். இதனால், சிறுவனுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதேவேளை நாளுக்குள் நாள் வயிறும் வீங்க தொடங்கியுள்ளது.
காரணம் புரியாத சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தபோதே இது தொடர்பில் தெரியவந்துள்ளது.
சிகிச்சையின்போது சிறுவனின் பெருங்குடல் மற்றும் சிறுங்குடலில் இருந்து சுமார் 4 அடி நீளமுள்ள முடி அகற்றப்பட்டுள்ளது. 'எப்போதும் கையினால் முடியை இழுத்துக் கொண்டே இருப்பான். நாங்கள் அதனை விளையாட்டாக நினைத்து விட்டோம். தற்போது ஸ்கேன் முடிவுகளை பார்த்த பின்பு அதன்விபரீதம் புரிகிறது' என சிறுவனின் பெற்றோர் தெரிவித்தனர்.
தனது மகனை இனியாவது ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறுவனுக்கு தற்போது மொட்டை அடித்து விட்டனராம் அவனது பெற்றோர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago