2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனைவியின் மருத்துவ செலவுக்காக 35மைல் தூரம் நடக்கும் கணவன்

Kogilavani   / 2015 மார்ச் 04 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவி  என்பவள் ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். ஓர் ஆணின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில்  மகிழ்ச்சிகளைத் தருபவளே மனைவி என்று கூறுவதுண்டு.


ஆனால், அவ்வாறான மனைவிக்கு கணவன் செய்வது என்ன? சுகயீனமுற்றிருக்கும் தனது மனைவியை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நாளொன்றுக்கு 35 மைல் தூரம் நடந்து செல்லும் நபர் பற்றி கேள்வியுற்றிருக்கின்றீர்களா?


ஆம், ஸ்டீவன் சிம்ஓப் எனும் 61 வயதுடைய நபர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டேவிஸ் நகரத்தில் வசிக்கின்றார்.   இவர் அமெரிக்காவின் ஒசேல்லோ லாவா எனும் நகரத்திலுள்ள சூதாட்ட களகமொன்றில், வாயில் பாதுகாவலராக பணியாற்றுகின்றார்.


இவர் வசிக்கும் இடத்துக்கும் கடமை புரியும் இடத்துக்கும் 35 மைல் தூரம்.  இவர் கடமைக்கு செல்வதற்காக நாளாந்தம் சுமார் 6 மணித்தியாலம் நடந்தே செல்கின்றார்.


இவருடைய மனைவி ஒரு இருதய நோயாளி, இவருக்கு ஏற்;கெனவே 2 தடவைகள் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  


மனைவியின் மருத்து செலவுகள் மற்றும் வீட்டின் ஏனைய செலவுகளுக்காக  அவர் இந்த தொழிலை செய்து வருகின்றார்.   இவர்; இரவு 11 மணிக்கு கடமையில் இருக்கவேண்டும். இதனால் அவருடைய வீட்டில் இருந்து பகல் 3.30 மணியளவில் கிளம்பிவிடுவாராம்.


அங்கிருக்கும் நெடுஞ்சாலையொன்றில் பனி, மழை,வெயில், காற்று, குளிர் என்று எதுவும் பாராது  நடந்தே சென்று பணம் சம்பாதித்து வருகின்றராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X