2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினமான கோப்ளின் சுறா

Sudharshini   / 2015 மார்ச் 03 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்னி அருங்காட்சியகம் ஆழ்கடலின் ஆழத்தில் வாழ்கின்ற அரியவகை சுறாவான கோப்ளின் சுறாவை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. பூமியில் 125 மில்லியன் வருடங்களாக வாழ்ந்து வரும் அரிய வகை உயிரினம் கோப்ளின் சுறா.

'த டீப் ஏலியன்' அதாவது ஆழ் கடலின் ஏலியன் என்றழைக்கப்படும் இது ஆழ்கடலின் மிக ஆழத்தில் இருப்பதால் பலர் இதை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

சிட்னியில் உள்ள அருங்காட்சியகம் கோப்ளின் சுறாவின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளது.

சுறாவின் பற்கள் சிறிய கத்திகளை போன்ற தோற்த்துடன்;; பார்ப்பவர்களுக்கு மிரட்சியை உண்டாக்குகிறது. கோப்ளின் சுறா அதன் இரையை கண்டறிந்தது, தன் நெற்றியில் மண்வெட்டி வடிவத்தில் உள்ள சிறப்பு உடலமைப்பினால் அதன் சதைப்பிடிப்பான பகுதிகளை கவ்வி இழுத்து சில நொடிகளில் இரையை வேட்டையாடும்.

இந்த விலங்கின் தாடை நுட்பம் வசீகரமானது என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியக மீன் சேகரிப்பு மேலாளர் மார்க் மெக்ரோத்தர் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரைப்பகுதியான ஈடனில் 200 மீட்டர் ஆழத்தில் (656 அடி) இந்த அரிய வகை மீனை பிடித்த மீனவர் இதன் மதிப்பை உணர்ந்து உள்ளூர் மீன் பண்ணையில் கொடுத்துள்ளார்

தற்போது இந்த கோப்ளின் சுறா சிட்னியில் உள்ள அருங்காட்சியகதில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X