Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் எங்கு யுத்தம் நடைபெற்றாலும் அந்த யுத்தத்தின் மூலம் இறக்கும் மனித உயிர்களின் தொகைகளையும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையுமே அனைவரும் கணக்கில் கொள்வதுண்டு.
ஆனால், காசாவில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த விலங்குகள் தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன.
காசாவின் மிகவும் வறுமையான பகுதியில் கான் யூனிலஸ் மிருகக்காட்சி சாலை அமைந்துள்ளது. இந்த மிருக பூங்காவில் உள்ள விலங்குகள் அனைத்தும் காசா யுத்தத்தின் காரணமாக, கவனிப்பாரற்று, எவ்வித மருத்துவ சிகிச்சைகளோ, உணவுகளோ கொடுக்கப்படாமல் உயிரிழந்துள்ளன.
அவை உயிரிழந்தாலும் அவைகளின் உருவங்கள் இன்னும் அப்படியே இருப்பதை புகைப்படங்கள் மூலம் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீன்- இஸ்ரேல் மோதல் காரணமாகவே எங்களது மிருகங்கள் உயிரிழந்துள்ளன என்று குறித்த மிருகக்காட்சி சாலையின் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
மிருகக்காட்சி சாலையில் இருந்த அரிய இன சிங்கம், புலி, பல்வேறு குரங்கு இனங்கள், முதலைகள், முள்ளம்பன்றிகள், கொக்குகள், வரிக்குதிரைகள் போன்ற பல்வேறு மிருகங்கள் இவ்வாறு உயிரிழந்து வருகின்றன.
யுத்த காலத்தில் மிருகங்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்கான வைத்தியர்கள் இருப்பதில்லை என்றும் அலைபேசி மூலம் தொடர்புகொண்டே மருந்துகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது பலகாலமாக நடந்து வருவதாகவும் பல மிருகங்களின் உயிர்கள் அநியாயமாக அழிந்து வருவதாகவும் மிருகக்காட்சி உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago