Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜனவரி 27 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
குதிரைகளை ஓட்டப்பந்தயங்களுக்காக மாத்திரமே பலர் வாங்குவதுண்டு. அந்த குதிரைகளை பயன்படுத்தி பலவாறு வருமானத்தை உழைத்துக்கொண்டாலும் அது ஏதேனும் சுகவீனமுற்று, அதனால் ஓட முடியாது என்று தெரிந்தால் குதிரையை சுட்டுக்கொல்வது வழக்கமாகிவிட்டது.
எனினும் குதிரைகளை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வருபவர்களும் உண்டு. இவ்வாறு ஒரு வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டுள்ள குதிரையொன்று சுமார் 2 மீற்றர் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து அழுதுகொண்டிருந்த சம்பவம் பலரை கண்கலங்க செய்துள்ளது.
இங்கிலாந்தின் ஹிங்க்லெ எனும் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 'பொக்சி' என்று அழைக்கப்படும் குதிரையை குடும்பமொன்று வளர்த்து வந்துள்ளது. இக்குதிரை வழிதவறி சென்று
கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
கிணற்றுக்குள் அழுதுகொண்டிருந்த குதிரையை அவ்வழியே சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் எதேச்சையாக பார்த்துள்ளதுடன், அதன்மீது இரக்கம் கொண்டு குதிரையின் உரிமையாளர்களிடம் அது தொடர்பில்
அறிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவந்ததும் குதிரையின் உரிமையாளர்கள் விலங்கு பாதுகாப்பு மையத்துக்கும் தீயணைப்பு படையினருக்கும் தெரிவித்துள்ளனர்.
பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் குதிரை மீட்கப்பட்டுள்ளது. எனினும் குதிரையின் பின்னங்கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மீட்டெடுப்பதற்கு 20,000 பவுண்ட் செலவழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு விபத்து சம்பவத்தில் பணியாற்றுவதற்கான பயிற்சியை தீயணைப்பு படையினர் பெற்றிருக்கவில்லையாயினும் தைரியமாக செயற்பட்டதாகவும் இச்சம்பவத்துக்கு உதவியமை எமது படைக்கு கிடைத்த முதல் அனுபவமென்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago