2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

இருபாலுறுப்புகளுடன் பிறந்த பூனை ஆண் பூனையாக மாற்றம்

Kogilavani   / 2015 ஜனவரி 23 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆணாக பிறந்தவர் பெண்ணாகவும் பெண்ணாக பிறந்தவர் ஆணாகவும்  மாறும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை நாம் அறிந்ததே. ஆனால், வழமைக்கு மாறாக இருபால் உறுபுகளுடன் பிறந்த பூனையை சத்திரசிகிச்சையின் மூலம் ஆணாக மாற்றிய சம்பவமொன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது.


ஆம், கனடாவில் இருபால் உறுபுகளுடன் பிறந்த பூனையை மருத்துவர்கள் சத்திரசிகிச்சையின் மூலம் ஆண் பூனையாக மாற்றியுள்ளனர்.


மிட்டன் என்றழைக்கப்படும் பூனையை கனடாவைச் சேர்ந்த கொலின் என்பவர் வளர்க்க முற்பட்டுள்ளார். ஆனால், அப்பூனை இருபாலுருப்புகளுடன் பிறந்திருப்பதை பிறகே அவர் அறிந்துள்ளார்.


இருபாலுறுப்புகளுடன் பிறந்த இப்பூனை சிறுநீர் கழிக்கும்போது பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொள்வதை அவதானித்த அதனது உரிமையாளர் உடனடியாக பூனையை விலங்கியல் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்.


பூனையை பரிசோதித்த மருத்துவர்கள் பூனைக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென கூறியுள்ளனர்.


பெண் பூனையாக மிட்டனை மாற்றுமாறு கொலின் வைத்தியர்களிடம் பரிந்துரைக்க வைத்தியர்கள், பெண் பூனையாக மாற்றினால் அது மிட்டனுக்கு நல்லதல்ல என கூறியுள்ளனர். பின்னர், வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைவாக மிட்டன் பெண் பூனையாக மாற்றப்பட்டுள்ளது.


இதற்காக,1,500 அமெரிக்க டொலர்கள் செலவாகியதாகவும் பூனை குணமாகினால் அதுவே தனக்கு போதுமெனவும் கொலின் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X