2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கரையொதுங்கிய திமிங்கிலம்

Gavitha   / 2015 ஜனவரி 14 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடலுக்கடியில் வாழும் திமிங்கிலங்கள் நீரில் வாழ்ந்தாலும் அவை நிலத்துக்கு உரியது. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் அவை மான், பசு போன்ற பாலுட்டிகளிடமிருந்து தோற்றம் பெற்றன.

அவ்வாறிருக்கையில், இங்கிலாந்தின் கடற்பிரதேசமொன்றில் சுமார் 60 அடி நீளமுடைய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. இது 45,000 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது.

நாயொன்றுடன் கடற்கரை வழியே நடந்து சென்றுகொண்டிருந்த போது இதனை கண்டதாக, திமிங்கிலத்தை கண்டவர் தெரிவித்துள்ளார்.

'முதலில் அதனை கண்டதும் பாரிய மீன் வலையாக இருக்கும் என்று எண்ணிணேன். இருப்பினும் எனது நாய் அதை கண்டு குரைக்க ஆரம்பித்தது. அருகில் சென்று பார்தவுடனேயே திமிங்கிலம் என்று அறிந்து வேதனையடைந்தேன்' என்று திமிங்கிலத்தை கண்டவர் தெரிவித்துள்ளார்.

இந்த திமிங்கிலம் உயிரோடு இருந்திருந்தால், 90 அடி நீளத்துக்கு 70,000 கிலோகிராமை கொண்டமைந்ததாக வளர்ந்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .