2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காரை நொருக்கிய யானை

Gavitha   / 2015 ஜனவரி 14 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


யானைகள், மனிதர்களினால் சட்டவிரோதமாக துன்புறுத்தப்படுவதனாலும் கொல்லப்படுவதனாலும் பெரிய உருவத்தை கொண்டுள்ள யானைகள் அச்சத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றன.

இதனால் மனிதர்கள் மீது கொண்ட கோபமோ என்னவோ, அடிக்கடி யானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன.
அவ்வாறான யானையொன்று, கரொன்றின் மீது ஏறி, காரை நொருக்கிய சம்பவம் தொடர்பிலான கணொளியொன்று வெளியாகியுள்ளது.

தாய்லாந்து, பேங்கொக்கில் அமைந்துள்ள காவோ யை தேசிய பூங்காவில், இனப்பெருக்க பருவகாலத்தின் போது, தப்பி வந்த யானையொன்று, அவ்வீதியால் வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்றின் மீது ஏறி காரை நொருக்கியுள்ளது.

குறித்த கார் தாய்லாந்தின் தேசிய சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக சென்று கொண்டிருந்துள்ளது. இதன்போது, வீதியில் தலை தெறிக்க ஓடி வந்த யானை,அதனது முன்னங்காலால் கார் மீது ஏறி நின்றுள்ளது. பின்னர் காரில் அமர்ந்துமுள்ளது.

இச்சம்பவத்தால், காரின் உள்ளே இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது, எடுக்கப்பட்ட காணொளி இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இதனை பெரும்பாலானோரும் பார்வையிட்டுள்ளனர். குறித்த இடத்திலிருந்த வேறு 2 கார்களும் சேதமடைந்துள்ளன. ஆனால் அது எந்த யானையால் சதப்படுத்தப்பட்டது என்பது தொடர்பான விடயங்கள் தெரியாது என்று அப்பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனப்பெருக்க காலங்களில் ஏற்படும் மனஅழுத்தம் காரணமாக யானைகள் இவ்வாறு நடந்துகொள்ளும் என்றும் ஆனால் காரொன்றை
சேதப்படுத்துமளவுக்கு நடந்துகொள்ளாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .