2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பனிக்குடம் உடைந்தும் உயிர் வாழ்ந்த சிசு

Gavitha   / 2015 ஜனவரி 07 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொதுவாக பிறந்த சிசுவொன்றின் எடை, 3.4 அல்லது 2.7 - 4.6 கிலோகிராம் கொண்டதாக இருந்தால் தான், அது ஆரோக்கியமான சிசு என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அவ்வாறிருக்கையில் ஒரு கிலோ கிராம் சீனி பை மற்றும் தந்தையின் உள்ளங்கையை விட சிறிதாக பிறந்த சிசு தனது 1ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள வைத்தியசாலையில் பிறந்த சிசுவே இவ்வாறு அதனது பிறந்ததினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளது.

குறித்த சிசு, தாயின் வயிற்றில் 20 கிழமைகள் வளர்ந்தவுடன் தாயின் கருப்பபையில் உள்ள நீர்ப்பை உடைந்துள்ளது. சிசு இறந்திருக்கும் என்று வைத்தியர்கள் எண்ணினாலும் தாயின் பாசமும் தந்தையின் அரவணைப்பும் அச்சிசுவை 5 கிழமைகள் உயிருடன் கருப்பையில் வாழ வைத்துள்ளது.

5 கிழமைகளின பின்னர் சிசு அறுவைசிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கருப்பபையின் நீர்ப்பபை உடைந்தும் சிசு உயிர்வாழ்ந்திருப்பது மிகவும் அதிசயத்தக்க விடயம் என்று, தாய்க்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .