2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

தரைவிரிப்பில் சுற்றப்பட்ட பூனை

Gavitha   / 2015 ஜனவரி 07 , மு.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டால், அது எம்மை பெரிதும் பாதித்துவிடும். அந்தளவுக்கு வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளின் மீது நாம் அன்பு செலுத்துபவர்களாக உள்ளோம்.

இவ்வாறு பாசமுடன் வீட்டில் வளர்த்துவந்த பூனையொன்று காணாமல் போய், அயல் வீட்டாரின் தரைவிரிப்புடன் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில், மன்செஸ்டர் எனும் பகுதியில் வசித்துவரும் குடும்பத்தினர், அல்பஸ் என்ற பூனையை வளர்த்துவந்துள்ளனர்.
இந்த பூனை அயல்வீட்டில் போடப்பட்டிருந்த தரைவிரிப்பில் இருந்துகொண்டு, அவ்வீட்டு குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தது.

சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களை உடைய இந்த பூனை படுத்திருந்த தரைவிரிப்பும் சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களை கொண்டிருந்தது. இந்நிலையில், பூனை தரைவிரிப்பில் இருந்தமை தெரியாமல், பூனையுடன் தரைவிரிப்பைச் சுற்றி தரைவிரிப்பு சுத்தம் செய்யும் இடத்துக்கு அயல் வீட்டார் கொண்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு தரைவிரிப்புடன் கொண்டு செல்லப்பட்ட பூனையை சுத்தம் செய்யும் நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் கண்டு அயல்வீட்டாருக்கு தெரியப்படுத்தினார்.

அயல் வீட்டில் பூனையை வைத்துக்கொண்டு, ஊரெங்கும் அவர்களது செல்லப்பிராணியான அல்பஸை தேடி அலைந்ததாக, பூனையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X