2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பின்னோக்கிய கால்கள்

Gavitha   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாதரண இயல்புடைய குழந்தைகளை விட மாற்றுத்திறனாளிகளான குழந்தைகள் வலு கெட்டிக்காரர்களாக மிளிர்வார்கள் என்பதை பல சம்பவங்கள் பறைச்சற்றியுள்ளன. அதற்கு இவரும் ஓர் உதாரணம்.

பிறக்கும் போதே பின்னோக்கிய கால்களுடன் பிறந்த சீன பெண்ணொருவர், சாதாரண மனிதர்களைவிடவும் திறமை வாய்ந்தவராக காணப்படுகின்றார்.

சீனாவில் சோங்கிங் எனும் பகுதியில் வசித்து வரும் வேங் பேங் (வயது 30) எனும் பெண் பிறக்கும்போதே பின்னோக்கிய கால்களுடன் பிறந்தார்.  
இவரால் நடக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இப்பெண் மற்றைய நண்பர்களை விடவும் வேகமாக ஓடக்கூடியவராக உள்ளார்.

'என்னால், என்னுடைய மற்றைய நண்பர்களை விட வேகமாக ஓடமுடியும். நான் உணவகமொன்றில் கடைமை புரிகின்றேன். என்னுடைய காலணிகளை தலைகீழாக அணியும்போது அதுவொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கின்றது. நான் அனைவரை போல இருக்க மாட்டேன் என்று வைத்தியர்கள் கூறினாலும் தற்போது என்னை பற்றி உலகமே பேசுகிறது என்பதை நினைத்து பெருமையடைகின்றேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .