2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மாபெரும் சிலந்தி வலை

Gavitha   / 2014 ஒக்டோபர் 08 , மு.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலந்தியை கண்டு பயந்தாலும் சிலந்தியின் வலையை கண்டு பயப்படுபவர்கள் மிகவும் அரிதே. இருந்தாலும் 6 கால்களை கொண்ட சிலந்தி ஒன்று மனிதனின் உருவத்தை விடவும் மிகப்பெரிய வலையை பின்னியிருப்பதை பார்த்தால் என்ன செய்வீர்கள்?

ஆம், 6 கால்களை உடைய சிலந்தியொன்று மாபெரும் வலையை பின்னி பார்ப்பவர்களை அச்சத்திற்குள் ஆழ்த்திய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

ஓய்வூதியம் பெறும் 74 வயதுடைய வயோதிபர் ஒருவரின் கராஜில் இச்சிலந்தி தனது வலையை பின்னியுள்ளது. காரின் பக்கக்கண்ணாடியிலிருந்து கராஜ் வரை பின்னப்பட்டிருந்த இந்த வலை, மனிதர்களின் உடல் நீளத்தை விடவும் மிக பெரிதாக காணப்பட்டுள்ளதாம்.

'ஒரு சிலந்தியால் இவ்வளவு பெரிய வலையை எவ்வாறு பின்ன முடியும் என்று நினைக்கையில் ஆச்சரியமாக உள்ளது. நான் வெளிச்சத்துடன் கராஜூக்கு சென்றதால் வலையில் மாட்டிக்கொள்ளவில்லை. எனினும் எனது மனைவி அங்கு சென்றிருந்தால் ஊரையே கூட்டியிருப்பாள்' என அந்த வயோதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .