2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காதலியின் உடலை வெட்டி சமைத்து உண்ட நபர்

Kogilavani   / 2014 ஒக்டோபர் 06 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர் ஒருவர் தனது காதலியின் உடலை வெட்டி, துண்டு துண்டாக்கி அதை சமைத்தும் உண்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அந்நபரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சிட்னியில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் மனித உடலின் பாகங்கள் கிடந்ததை கண்டு அதர்ச்சியடைந்த அயலவர்கள் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வீட்டில் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்டபோது  அந்த வீட்டில் வசித்து வந்த நபர், தனது காதலியைக் கொலைசெய்து உடலை சமைத்து உண்டுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.  

'தகவல் கிடைத்தும் நாங்கள் வந்தோம். வீட்டில் ஒரு பெண்ணின் உடலை சமைத்திருப்பது தெரியவந்தது. மேலும் வீட்டுக்கு அருகே ஒருவரின் உடலும் கிடந்தது. அந்த நபர்தான் இந்த வீட்டில் வசித்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவர்தான் தனது காதலியைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது“ என இச்சம்பவம் தொடர்பில் இன்ஸ்பெக்டர் டாம் ஆர்மிட் தெரிவித்துள்ளார்.

கப்பல்களில் சமையல்காரராக பணியாற்றி வந்தவர் சமீபத்தில்தான் தனது இந்தோனேசிய நாட்டுக் காதலியுடன் இங்கு குடிவந்தார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • rizmi infas Thursday, 09 October 2014 06:37 PM

    இது போன்ற தகவல்களை பெற்றுக்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துகிறேன். தயவுசெய்து உடனடியான உண்மைச் சம்பவங்களை அறியத்தருமாரு மிக பணிவாய் வேண்டிக்கொள்கிறேன்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .