2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குப்பைத்தொட்டியில் பேராசிரியர்

Gavitha   / 2014 செப்டெம்பர் 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


குப்பைத் தொட்டியில் வாழ்வதற்கு யாராவது விரும்புவீர்களா? அதுவும் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் குப்பைத்தொட்டியில் தனது நாட்களை கடத்துவது பற்றி கனவிலேனும் யோசித்திருப்பாரா?.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியரியர் ஒருவர் குப்பைத் தொட்டில் வசித்து வரும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடைமையாற்றும் பேராசிரியரான வில்சன் என்பவர், பொதுமக்கள் சாதாரண வாழ்க்கையை விரும்புகின்றார்களா என்பதை ஆய்வு செய்வதற்காக, குப்பைத்தொட்டியில் ஒரு வருட காலம் வாழ்வதற்கு தீர்மானித்துள்ளதுடன், குப்பைத்தொட்டியொன்றை வீடாக மாற்றி, சுமார் 7 மாதங்களாக வாழ்ந்தும் வருகின்றார்.

இவருடைய குப்பைத்தொட்டி வீடானது 36 சதுர அடி அளவினை கொண்டுள்ளது.

குப்பைத்தொட்டி வாழ்க்கையில் மிகவும் கடினமான விடயம் வெப்பத்தை தாங்கிக்கொள்வதேயாகும். எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இவ்வீட்டில், வெப்பகாலத்தில் 45பாகை செல்சியஸ் வெப்பமும் குளிர்காலத்தில் 5 பாகை செல்சியஸ் வெப்பமும் காணப்படுகின்றதாம்

மேலும் மலசலக்கூடத்திலிருந்து வரும் நாற்றத்தையும் பொறுத்துதான் ஆகவேண்டும்.

எனினும் அவருடைய ஆராய்ச்சிக்கான புதிய வழிமுறைகளை கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருக்கின்றார்.
ஆரம்பத்தில் இவருடைய இந்த திட்டத்தை பலரும் நிராகரித்தனர். இருந்தபோதிலும் திட்டத்தை கைவிடாமல் முயற்சித்து தற்போது தன்னுடைய ஆய்வின் முடிவு கட்டத்தில்  இருக்கின்றார்.

இப்பேராசிரியருக்கு இவ்வாறானதொரு எளிமையான வாழ்க்கை பிடித்திருந்தால் அவர் மேலும் ஒரு வருடம் குப்பைத்தொட்டியிலேயே தனது காலத்தை கழிக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .