2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காதலிக்காக நாய்க் கறி

Gavitha   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலன் - காதலிக்கு இடையில் பல்வேறு விடயங்கள் பரிமாறப்படுவதை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் நபரொருவர் தனது காதலிக்கு நாய்க் கறியை பரிமாறிய சம்பவம் அமெரிக்க காதலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த நபரொருவருடன் அவரது காதலி முதல் முறையாக டேட்டிங்குக்கு சென்றுள்ளார். இதன்போது அந்நபர் தனது காதலியுடன் மிகவும் கடுமையாக நடந்துக் கொண்டுள்ளார்.

அன்பை பரிமாற வேண்டிய நேரத்தில் அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண், உன் சகவாசமே வேண்டாம் சாமி என்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்துள்ளார்.

சிலகாலம் அந்நபரின் தொல்லையின்றி வசித்து வந்துள்ளார். எனினும் சில மாதங்களின் பின்னர், அந்தப் பெண்ணை கெடூர காதலன் மீண்டும் சந்தித்துள்ளான்.

அப்போது, தான் முன்னர் நடந்து கொண்டமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் இனிமேல் இப்படி நடந்து கொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முரட்டு காதலனின் மென்மையான போக்கில் இந்த பெண் நம்பிக்கை வைத்துள்ளார். இந்நிலையில், ஒருநாள் அப்பெண்னை தனது வீட்டுக்கு விருந்து தருவதாக கூறி குறித்த காதலன் அழைத்துள்ளார்.

விருந்து முடிந்து வீட்டுக்குச் சென்று தனது வாசற்படியில் காலை வைக்கும் சமயம் பார்த்து, அந்த பெண்ணின் அலைபேசிக்கு காதலனின் அலைபேசியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியை படித்ததும் அதிர்ச்சியடைந்த பெண், நேராக கழிவறைக்கு சென்று வாந்தியெடுத்துள்ளார்.

அந்த குறுஞ்செய்தி என்ன அவ்வளவு மோசமாகவா இருந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அந்த குறுஞ்செய்தி இதுதான்,

நீ அப்போது மூக்கு பிடிக்க சாப்பிட்டு போனாயே, அது என்ன கறி தெரியுமா? அது நீ வளர்க்கும் பொமேரியன் இன செல்ல நாய் பப்பி, அதன் கறிதான். உணவு எப்படி சுவையாக இருந்ததா? என்ற கேள்வியுடன் அந்த நாயின் புகைப்படம் ஒன்றும் அந்த குறுஞ்செய்தியில் காணப்பட்டுள்ளது.

மேலும், உன் வீட்டு கதவருகே போய்ப் பார். உன் நாயின் கால்கள் கிடக்கும் என்றும் குறுஞ்செய்தியில் குறும்பு செய்துள்ளார்.

கதறியபடி பதறியடித்து, அந்த பெண் வாசலுக்கு ஓடிவந்து பார்த்தபோது, அங்கே தனது செல்ல வளர்ப்பு நாயின் கால்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துடன் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார்,  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் வெளியில் வந்ததும் அமெரிக்க காதலர்கள் பலரும் தாம் சாப்பிட்டதும் ஒருவேளை அதுவாக இருக்குமோ? என்ற அச்சத்தில் உள்ளனராம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .