2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

காலுறைகளை வயிற்றில் சுமந்த நாய்

Gavitha   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


காலுறைகளை வயிற்றில் சுமந்த நாயை பற்றிய சுவாரஷ்யமான சம்பவமொன்று போட்லாந்து நாட்டில் பதிவாகியுள்ளது. குறித்த நாயின் வயிற்றிலிருந்த 44 காலுறைகள் சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளன.

64 கிலோ கிராம் நிறைகொண்ட கொண்ட க்ரேட் டேன் இனத்தை சேர்ந்த மூன்று வயதுடைய நாயின் வயிற்றிலிருந்தே இவ்வாறு காலுறைகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்நாயானது, காலுறைகளை கடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த போதும், அவற்றை விழுங்கி விடும் என்பது தொடர்பாக நாயின் உரிமையாளர்கள் அறிந்திருக்கவில்லை.

அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேற்படி நாயை, அதன் உரிமையாளர்கள் டவ்லூயிஸ் விலங்குகளுக்கான அவசர சிகிச்சை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சு பரிசோதைனையின் போது, நாயின் வயிற்றில் பருத்தி பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக மேற்கொள்ளப்பட்ட இரண்டரை மணித்தியால சிகிச்சையின் பின்னரே மேற்படி 44 காலுறைகளும் நாயின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

கிடைப்பதை கடித்து உண்பது நாய்களது பிறவி குணம் என்பதால், அது தொடர்பில் உரிமையாளர்களே கவனத்துடன் செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .