2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நித்தியானந்தா 'அதுக்கு' மறுப்பு

George   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனையின்போது என்னவெல்லாம் செய்யப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் வழக்கு ஒன்றில், சாமியார் நித்தியானந்தா தனது உடல் குழந்தைவாகுவுடன் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். இதைதொடர்ந்து அவருக்கு ஆண்மை சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஆண்மை சோதனை மூன்று வகையாக நடத்தப்படுவது வழக்கம். முதலாவதாக, உடலில் ஆண் குறி உள்ளதா என்பதை கண்ணால் பார்த்து உறுதி செய்வது, 2ஆவது ஊசி மூலமாக ஆண்மை சோதனை, மூன்றாவது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்வது. இதை தவிர நான்காவதாக விந்தணுவை சோதித்து பார்ப்பதும் ஒரு சோதனை முறையாகும். ஆனால் விந்தணு சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆண் உறுப்பு உள்ளது

நித்தியானந்தாவிற்கு ஆண் உறுப்பு இருப்பது வைத்தியர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு ஆண் உறுப்பில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஊசி போடப்பட்டது. அப்படி ஊசிபோட்டதும் இரத்த நரம்புகளில் இரத்தம் பீறிட்டுச் செல்லும். இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும்.

ஆண்மையில்லாவிட்டால் ஆண் உறுப்புக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது. அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள்.

எழுச்சி இருந்ததா?

இதன்படி நித்தியானந்தாவுக்கு ஊசி போட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு எழுச்சி இருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

நித்தியானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனைக்கு 10 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபாய் பிரகாரம்) செலவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், ஆண்மை ஊசி ஒன்றுக்கு மட்டுமே இதில் 5 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விந்தணு சாம்பிளை எடுப்பதற்காக நித்தியானந்தாவை சுய இன்பம் அனுபவிக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தினர். இதற்காக தனியான ஒரு அறை ஏற்பாடு செய்து, காம உணர்ச்சியை தூண்டும் வகையில் பெண்களின் நிர்வாண படங்களுடன் கூடிய செக்ஸ் கதை புத்தகத்தை நித்தியானந்தாவிடம் அளிக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர்.

ஆனால், தன்னால் சுய இன்பம் அனுபவிக்க முடியாது என்று நித்தியானந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, அவரை கட்டாயப்படுத்தி விந்தணுவை அளிக்க வைத்தியர்களால் வற்புறுத்த முடியவில்லை. இதற்கு தனியாக கோர்ட் அனுமதி தேவை என்று வழக்கை விசாரிக்கும் பொலிஸாரிடம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நித்தியானந்தாவிடம்தான் ஆண்மை சோதனை நடத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமாக, அவரது ஆண் உறுப்பை சுற்றியுள்ள முடியை 'கட்' செய்து வைத்தியர்கள் சேகரித்து வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்போது இதுவும் ஒரு ஆதாரமாக தேவைப்படும் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

ஆண்மை சோதனை நடத்துவதற்கு முன்பாக நித்தியானந்தாவின் உடல் நிலை எப்படி உள்ளது என்பது குறித்து பொது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இரத்த மாதிரியில் நித்தியானந்தாவுக்கு நீரிழிவு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், உயர் இரத்த அழுத்தம் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக வைத்திய குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே,  பெங்களுர் சாம்ராஜ்பேட்டையிலுள்ள, விக்டோரியா மருத்துவமனை சோதனையை தொடர்ந்து, அங்கிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மடிவாளாவிலுள்ள தடயவியல் ஆய்வு மையத்துக்கு நித்யானந்தா அழைத்து செல்லப்பட்டு குரல் சோதனை நடத்தப்பட உள்ளது. ஆண் அல்லது பெண் குரலா, வயதுக்கேற்ற குரல் உள்ளதா என்பதை இந்த சோதனை மூலம் உறுதி செய்ய முடியும்.

ஆண்மை சோதனை நடத்தப்பட்டபோது, வைத்தியர்களுக்கு நித்தியானந்தா சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தனது சிஷ்யரான வைத்தியர் ஒருவரையும் நித்தியானந்தா மருத்துவமனைக்கு உடன் அழைத்து வந்திருந்தார்.

வைத்தியர்கள்  நித்தியானந்தாவுக்கு எந்த ஒரு சோதனையை செய்ய முற்படும்போதும், இந்த சோதனை எதற்காக?, இந்த ஊசி எதற்காக? என்பது போன்ற கேள்விகளை கேட்டு வைத்தியர்களை டென்ஷன் செய்து வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

You May Also Like

  Comments - 0

  • Esan Seelan Monday, 08 September 2014 12:03 PM

    என்ன கொடுமை சரவணா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .