2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாழ்க்கைக்கு வேட்டு வைத்த 'வேட்கை'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 07 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஆசை என்பது தமக்கெது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் மாறுபட்டாலும் ஏதாவது தேவைகள் கண்டிப்பாக இருந்து கொண்டே இருப்பதனால் ஆசையும் அழிவில்லாது இருந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் என்பர், அதனால் பல குடும்பங்கள் சீரழிந்து சின்னாப்பிமாகிவிடுகின்றன.  அதற்கு அப்பால், மனைவியின் அதீத பாலுணர்வுக்கு விவாகரத்து வழிகோலிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

பாலுணர்வுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நபரொருவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்த சம்பவம்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மும்பையை சேர்ந்த நபரொருவர் மும்பையிலுள்ள குடும்பநல நீதிமன்றில்; தனது மனைவிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அவர்,

தனது மனைவியின் அதீத பாலியல் வேட்கைக்கு தன்னால் ஈடுகொடுக்க முடியவில்லையென்றும் தனது மனைவியிடம் இருந்து விவகாரத்து பெற்றத்தருமாறும் அவர், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

மேற்படி இருவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்த காலம் தொடங்கி தனது மனைவி இவ்வாறு நடந்துகொள்வதாக அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

'பலமுறை கூறியும் எனது மனைவி தனது நடத்தையை மாற்றிகொள்ளவில்லை. எனது ஆண்மையை அதிகரிப்பதற்காக பாலியல் உணர்வை தூண்டும் வகையிலான மருந்துகளையும் தந்தார். தனது அதீத பாலியல் உணர்வுக்கு ஈடுகொடுக்க முடியாவிட்டால் தான் வேறு ஆண்களுடன் பாலியல் உறவுகொள்ள போவதாக என்னை அச்சுறுத்தினாள்' என அந்நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய செயற்பாடு காரணமாக கடந்தவருடம் குடல் அழற்சிநோயினால் தான் பாதிக்கப்பட்டதாக அந்நபர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

You May Also Like

  Comments - 0

  • Sam Tuesday, 09 September 2014 12:59 AM

    she is...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .