2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

நாயுடன் யுவதிக்கு திருமணம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 03 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவில் யுவதி ஒருவரை நாயொன்றுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள மிகவும் பின்தள்ளப்பட்ட கிராமமொன்றில் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.

மங்கலி முண்ட என்ற 18 வயது யுவதிக்கே இவ்வாறு நாயுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இவ் யுவதி அதிஷ்டமற்றவள் எனவும் இவ் யுவதியை திருமணம் செய்யும் ஆண், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வார் என்றும் மேற்படி கிராமத்தின் பூசகர் ஒருவர் யுவதியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாயை முதலில் திருமணம் செய்தால் கெட்ட சகுணங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்று ஊரார் கூறியதை கேட்டு மேற்படி யுவதியின் பெற்றோர் நாய்க்கு யுவதியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

வழமையான திருமண நிகழ்வுகளை போன்று இத்திருமணமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

சேரு என்றழைக்கப்படும் நாயை திருமணத்துக்காக அலங்கரித்து காரில் அழைத்து வருகின்றனர். மணப்பெண்ணை அலங்கரித்து திருமண பந்தலுக்கு அழைத்து வருகின்றனர். பின்னர் அவ்வூர் வழக்கப்படி திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக திருமணம் நடத்தி முடிக்கப்படுகிறது.

'நாயை திருமணம் செய்தது பிடிக்கவில்லை. ஆனால், நன்மை கிடைக்கும் என்பதற்காக திருமணம் செய்தேன். இதற்கு பிறகு நல்ல ஒரு ஆணை தெரிவுசெய்து மணப்பேன்' என அப்பெண் தெரிவித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0

  • madu Thursday, 04 September 2014 01:26 AM

    என்ன கொடுமடா...

    Reply : 0       0

    mavin Thursday, 04 September 2014 06:48 AM

    Yena kodmao e'tu

    Reply : 0       0

    RISVI THALHAT Thursday, 04 September 2014 07:25 AM

    ஏன் ஃ

    Reply : 0       0

    Aduham Thursday, 04 September 2014 08:40 AM

    மூட நம்பிக்கை

    Reply : 0       0

    gokulan Friday, 05 September 2014 03:45 AM

    மூட நம்பிக்கை

    Reply : 0       0

    arun Friday, 05 September 2014 08:28 AM

    Ilankai modanampikkai eppavum entha maathiri manithargal erukkiraarkalthaan enna

    Reply : 0       0

    Venkatesh Saturday, 06 September 2014 10:11 AM

    என்ன கொடுமை இது.........
    இவர்கள் எப்போது மூடநம்பிக்கை விட்டு
    வெளியே வருவார்கள்

    Reply : 0       0

    fairos Monday, 08 September 2014 06:26 AM

    மடக்கூட்டம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .