2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பைபில் விவகாரம்: இளைஞன் கைது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிலின் மீது சிறுநீர் கழித்தது மட்டுமல்லாது அதனை தீக்கிரையாக்கிய இளைஞனை அமெரிக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

'டார்க் கோர்ட்' என்று தன்னை அடையாளப்படுத்திகொள்ளும் 22 வயதுடைய இளைஞனே இத்தகைய துர்நடத்தையில் ஈடுபட்டுள்ளான்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பிரெஸ்கோட் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து மேற்படி இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.

புனித நூலான பைபிலானது நனைந்த நிலையில் எரிந்துகொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரினால் கைதுசெய்யப்படும்போது இவ்விளைஞன், கருப்பு, சிவப்பு நிறத்திலான  ஆடை  அணிந்திருந்ததாகவும் பென்டகிரம் பெண்டன் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் ஈடுபடும் இடமென்பதால் தான் அவ்விடத்தை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ள அவ்விளைஞன் கிறிஸ்தவர்களை சபித்துமுள்ளான்.

ஏன் இவ்வாறு செய்கிறாய் என உயர் அதிகாரிகள் கேட்டபோது தான் இருள் கடவுள் என இளைஞன் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உள்ளூர் தடுப்பு மையத்தில் குறித்த இளைஞன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றான்.

You May Also Like

  Comments - 0

  • Vignesh Monday, 01 September 2014 12:06 PM

    da vinci code will explain all your questions

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .