2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

செவிக்குள் நுழைந்து ரீங்காரமிட்ட ஈ

Gavitha   / 2014 ஓகஸ்ட் 26 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவரின் காதுக்குள் நுழைந்த ஈ ஒன்றை மூன்று நாட்களுக்கு பின்னர், சுமார் 90 நிமிட சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தப்பட்ட சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் ஐலெஸ்பெரி எனும் நகரத்தைச் சேர்ந்த ரொப் பீல்டிங் எனும் 43 வயதான நபருக்கே இவ்வாறானதொரு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

3 குழந்தைகளின் தந்தையான இவர் தனது படுக்கையில் சாய்ந்துக்கொண்டு புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த போது, அவரது மூக்குக்கண்ணாடிக்கு மேல் ஒரு ஈ வந்து அமர்ந்துள்ளது.

அவர், அந்த ஈயை தனது கையால் தட்டிவிட்டபோது, அது அவரது காது பகுதிக்கு சென்று காதினுள் சென்றுவிட்டது. இந்நிலையில் சிறிது நேரத்தில் ஈ வெளியே வந்துவிடும் என்று எண்ணி சிகிச்சை ஏதும் செய்யாது அவர் இருந்துள்ளார்.

காதினுள் சென்ற ஈ மூன்று நாட்களாகியும் வெளியில் வராத்தையடுத்தே அவர் வைத்தியரை நாடியுள்ளார். முதலில், காதில் ஈ உள்ளது
என அவர் கூறும் போது வைத்தியசாலை பணியாளர்கள் முதலில் வியப்படைந்துள்ளனர்.

எனினும், ஒளிப்பாய்ச்சியின் ஊடாக ஒளியை காதினுள் செலுத்தி பார்க்கும்போது, ஈயின் கால்கள் தெரிந்துள்ளன. இதனையடுத்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டதுடன் சுமார் 90 நிமிடங்களின் பின்னர் குறித்த ஈ யை உயிரிழந்த நிலையில் வெளியில் எடுத்துள்ளனர்.

எனது காதில் ஈ பறக்கும் போது எனக்கு உடல் முழுவதும் கூசும். தானாகவே கால்கள் நடனமாடும் என்று ஈயை காதில் சுமந்த நபர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .