2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சக்கர கதிரையில் சாதனை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகின் மிக உயரமான மலைகளில் இருந்து பரசூட் மூலம் குதித்து பல சாதனைகளை படைத்த கனடா நாட்டு வீரர் லோனி பிவோனெட் (49) நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது சாதனை பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு தனது 1100 ஆவது சாதனையை புரிந்திருந்த இவர், 486 அடி உயரமான நீர்வீழச்சியில் இருந்து குதித்தபோது சிறுதடுமாற்றம் காரணமாக படுகாமயடைந்தார்.

இதனால் இவரது கால்கள் செயலிழந்தன. இந்நிலையில் இவர், கடந்த 10 வருடங்காளாக சக்கர கதிரையிலேயே வலம் வந்தார்.

தான் ஊனமுற்றவர் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள பாலமொன்றில் இருந்து பரசூட்டுடன் குதித்து தனது அசாத்திய திறமையை இவர் தற்போது நிலைநாட்டியுள்ளார். இதனை 1101 ஆவது சாதனையாக பலர் கருதுகின்றனர்.

காயமுற்று 10 ஆண்டுகள் நிறைவையொட்டியே அவர் இச்சாதனையை படைத்துள்ளார். எழுந்து நிற்க முடியாவிட்டாலும் தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்ட சக்கர கதிரையில் அமர்ந்த வண்ணமே இவர் பரசூட் மூலம் குதித்துள்ளார்.

'நான் மீண்டும் மலைகளுக்கு சென்று குதித்து காட்டுவேன்  என்று காயமடைந்த நாளில் இருந்து அனைவருக்கும் கூறி வந்தேன். அதனை இன்று நிலைநாட்டிவிட்டேன். இவ்வுலகில் யாருமே ஊனமுற்றவர் கிடையாது' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .