2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

குளோனிங் நாய்க்குட்டி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


குளோனங் முறையிலான நாயொன்றை முதன் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானியொருவர் உருவாக்கியுள்ளார்.

12 வயதுடைய டெக்ஷன்ட் இனத்தைச் சேர்ந்த வின்னி எனும் நாயொன்றின் மரபணுக்களை கொண்டு அதே போன்றதொரு நாய்  உருவாக்கப்பட்டுள்ளது.

ரெபேகா ஸ்மித் (வயது 29) என்பவரே வின்னியின் உரிமையாளராவார்.

வின்னியின் மரபணுவைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த குளோனிங் நாய்க்கு மினி வின்னி என்ற பெயரிடப்பட்டுள்ளது.

சாதாரணமாக இவற்றை உருவாக்குவதற்கு 60,000 ஸ்ரேலிங் பவுண்கள் செலவிடப்படும்.

ஆனால், வின்னியின் உரிமையார் போட்டியொன்றில் வெற்றி பெற்றதன் காரணத்தினால், இலவசமாகவே மினி வின்னி உருவாக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் பிறந்த இந்த குளோனிங் நாய்க்குட்டியானது தென்னாபிரிக்காவைச் சேர்ந்த விசேட நிபுணர் ஒருவரின் பராமரிப்பில் சுமார் 5 மாதங்கள் இருந்துள்ளது.

பின்னரே, அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனது இரு நாய்களும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும் சிறு வயதில் வின்னி எவ்வாறெல்லாம் சேட்டைகளைச் செய்ததோ அவ்வாறே மினி வின்னியும் செய்கிறது என்றும் நாய்களின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.\





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .