2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கைவண்டியுடன் தண்டவாளத்தில் விழுந்த குழந்தை

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


புகையிரத நிலைய நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைகள் கைவண்டி, குழந்தையுடன் புகையிரத தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் அடங்கிய காணொளியொன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள அதிவேக புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற இச்சம்பம் அடங்கிய காணொளியை, பிரிட்டன் போக்குவரத்து பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குழந்தையை கைவண்டியுடன் கொண்டு வந்து புகையிரத நடைபாதையில் நிறுத்தியுள்ள அக்குழந்தையின் தந்தை, புகையிரத நிலையத்தில் நின்றிருந்த வேறொரு குடும்பமொன்று, புகையிரத நடைப்பாதைக்கு வருவதற்கான உதவிகளைச் செய்துள்ளார்.
 
அந்நேரத்தில் அங்கு வீசிய கடுமையான காற்று காரணமாக குழந்தையின் கைவண்டியானது தானாகவே கட்டுப்பாட்டை மீறி புகையிரத தண்டவாளத்தில் போய் விழுந்துள்ளது.

புகையிரதம் வருவதற்கு ஒரு செக்கனுக்கு முன்னர் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் குழந்தையின் தாய் குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

இவ்வாறான புகையிரத நிலையங்களுக்கு வரும் பெற்றோர்கள், தங்களது குழந்தைகள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இது ஒரு பயங்கர விபத்தாக அமைந்திருக்கும். குழந்தையின் தாய் அவரது உயிரை பணயம் வைத்து குழந்தையை காப்பற்றியது பாராட்டத்தக்கது என்று பிரிட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .