2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

துர்நாற்றம் வீசிய அணையாடை: வாடிக்கையாளர்களை வெளியேற்றிய உணவகம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


உணவகமொன்றுக்கு குழந்தையுடன் சென்ற தம்பதியினரை அவ்வுணவக பணிப்பாளர் வெளியேற்றிய சம்பவமொன்று அமெரிக்காவில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

மேற்படி குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த அணையாடையில் (பெம்பஸ்) இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் செய்த முறைபாட்டை அடுத்தே குறித்த தம்பதியினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள பிரதர்ஸ் பீஸா எக்ஸ்பிரஸ் என்ற உணவக பணிப்பாளர்களே இவ்வாறு குழந்தையுடன் சென்ற தம்பதியை வெளியேற்றியுள்ளனர்.

மிரிண்டா சோவோர்ஸ் என்ற பெண், தனது நான்கு மாத சிசுவான ரீகன் மற்றும் 4, 8 வயது மகள்மாரான லோரன், கெட்டிலின் ஆகியோருடன் இவ்வுணவகத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது தனது நான்கு மாத குழந்தையின் அணையாடையை மாற்றுவதற்காக அவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். ஆனால், அந்த கழிவறையில் குழந்தையை நிறுத்தி அணையாடையை மாற்றுவதற்கான வசதிகள் இருக்கவில்லை.

இதனால், மீண்டும் தனது இருப்பிடத்திற்கு சென்ற அப்பெண், யாருக்கும் தெரியாமல் குழந்தையின் அணையாடையை அவசரமாக மாற்றியுள்ளார்.

இதன்போது, குழந்தையின் அணையாடை துர்நாற்றம் வீசுவதாக அருகில் இருந்தவர்கள் உடனடியாக உணவக நிர்வாகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த உணவக பணிப்பாளர், அப்பெண்ணிடம் சென்று அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளதோடு,  அப்பெண்ணால் தெரிவுசெய்யப்பட்ட உணவுகளை பொதிசெய்து வீட்டுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .