2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

முதலைக்கு சவால் விடுத்த சிறுவன்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


9 அடி நீளமுள்ள முதலையொன்றின் வாயில் சிக்கிய 9 வயது சிறுவவொனருவன், அம்முதலையுடன் சண்டையிட்டு உயிர் தப்பிய  சம்பவமொன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

புளோரிடா மாநிலத்திலுள்ள ஒசியோலா எனும் பிரதேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பார்னே என்ற சிறுவனே இவ்வாறு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதலையுடன் போராடியுள்ளான்.

இச்சிறுவன், தனது நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்த போது, தனது உடலை குளிர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அருகிலிருந்த மிகவும் ஆபத்தான ஏரியொன்றில் இறங்கி நீராட ஆரம்பித்துள்ளான்.

திடீரென்று தன்னை யாரோ கீழே இழுப்பது போல உணர்ந்துள்ள அச்சிறுவன், யாரோ தன்னிடம் விளையாடுவதாக எண்ணி, தன்னை இழுப்பது என்னவாக இருக்கும் என்று தொட்டு பார்த்துள்ளான்.

அப்போது தான், கூரிய பற்களைக் கொண்ட முதலையொன்று தன்னை வேட்டையாட முயற்சிக்கின்றது என்று அறிந்துகொண்டான். உடனே, தன்னை இழுக்கும் முதலையை இரண்டு தடவைகள் காலால் உதைத்து அதனுடன் போராடி கரை சேர்ந்துள்ளான்.

இருந்தும் இந்த போராட்டத்தில் சிறுவனது பிருடகத்தில் 3 பெரிய காயங்களும் கால், வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் சுமார் 30 நகக்காயங்களும் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த முதலையானது சுமார் 9 அடி நீளத்தையும் 226 கிலோகிராம் எடையையும் கொண்டது என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .