2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தலையில் தரித்து நின்ற கத்தி

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொடர்மாடிக் குடியிருப்பொன்றின் 8 ஆம் மாடியிலிருந்து விழுந்த கூறிய கத்தியொன்று தொடர்மாடிக் குடியிருப்பின் அருகில் நின்ற நபரொருரின் தலைலையை பதம்பார்த்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணம், கோன்கியன் பிரதேசத்தைச்சேர்;ந்த க்ஸியோ யோன்சி என்ற 57 வயது நபரே இத்தகைய விபரீத சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி நபர், தொடர்மாடிக் குடியிருபொன்றுக்கு அருகில் நின்றுகொண்டிருந்துள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக தொடர்மாடிக் குடியிருப்பின் 8 ஆம் மாடியிலிருந்து வீழ்ந்த 5 அங்குல நீளமான  கத்தியொத்தியொன்று அந்நபரின் தலையில் குத்தி செங்குத்தாக நின்றுள்ளது.

தனது தலையில் பாரமாக ஏதோ இருப்பதை உணர்ந்த அந்நபர் தலையை தனது கைகளால் தொட்டுப்பார்த்துள்ளார். இதன்போது கத்தியின் பிடி அவரது கையில் அகப்பட்டுள்ளதுடன் இரத்தம் வருவதையும் உணர்ந்;துள்ளார். இதன்பின்னரே தனது தலையில் கூறிய கத்தியொன்று குத்தியிருப்பதை அந்நபர் அறிந்துகொண்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு ஏதோ நடந்துவிட்டது என்பதை அறிந்துகொண்ட அந்நபரின் சகோதரி உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

சிகிச்சையின்போது அவரது தலையிலிருந்து 5 அங்குள நிளமான கத்தி அகற்றப்பட்டுள்ளது. ஆனால், இவருக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .