2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உயிர்காத்த ஐஸ் கட்டி

Gavitha   / 2014 ஜூலை 29 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


விபத்தொன்றில் சிக்கிய நபர் ஒருவர் தான் எப்படியாவது உயிர்பிழைத்து விடவேண்டும் என்பதற்காக 103 மணித்தியாளங்கள் ஐஸ் கட்டியை உட்கொண்ட சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வியட்நாமில் உள்ள மீன் தொழிற்சாலையொன்றில் தொழில்புரியும் மாய் தான்ங் சன்ங் எனும் நபரே இத்தகைய செயலை புரிந்துள்ளார்.

இவர், தனது சக பணியாளர்களுடன்; இணைந்து 22 டிகிரி செல்சியஸ் பாகை குளிரூட்டப்பட்ட அறையொன்றை துப்புரவு செய்துகொண்டிருந்த போது அங்கு, மீன்கள் நிறப்பப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாரிய மூடைகள் சரிந்து விழுந்துள்ளன.

இதன்போது அங்கு சுத்தம் செய்துகொண்டிருந்தவர்களில் பலர் காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். ஆனால், இவர் மட்டும் அந்த மூடைகளுக்குள் புதையுண்டு போயுள்ளார்.

இவரை மீட்பதற்கு நான்கு நாட்கள் தேவைப்பட்டுள்ளது. 

இவர், தனது குழந்தைகளுக்காகவும் மனைவிக்காகவும் எப்படியாவது உயிர்ப்பிழைத்து விட வேண்டும் என்று நினைத்து நான்கு நாட்கள் ஐஸ் கட்டியை உட்கொண்டு வந்துள்ளார். 

நான்காவது நாள் பலத்த காயங்களுடன் உடல் வீங்கிய நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட இவர் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பருத்தி உடைகளையும் தொப்பியையும் அணிந்திருந்தமையினாலயே இவர் உயிர் பிழைத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • Amulraj Thursday, 31 July 2014 03:35 PM

    அருமை !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .