2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பூனை மொழி

Kogilavani   / 2014 ஜூலை 23 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீட்டில் வளர்கப்படும் பூனைகள் கத்தும்போது அவற்றின் பிரச்சினைகள் என்னவென்று அறிந்துகொள்ளமுடியாமல் புலம்புவதே எமது வாடிக்கையாகிவிட்டது. ஆனால், பூனைகள் கத்தினால் அவற்றின் பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்துகொள்ளும் அசாத்திய திறமைகொண்ட இளைஞர் ஒருவர் பிரிட்டனில் வாழந்து வருகிறார்.

இங்கிலாந்தின், லிதேம்  சென் ஏன்ஸை  சேர்ந்த 29 வயதுடைய லோவிஸ் டெசூயர் என்பவரே இத்தகைய திறமையுடன் விளங்குகிறார்.

10 முறைக்கு 9 முறை அவை கண்சிமிட்டும் போது அவை என்னை நம்புகின்றதா இல்லையா என்பதையே உணர்த்த விரும்புகின்றன.  என்னால் பூனைகள் நினைப்பதையும்  பேசுவதையும் உணர்ந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை உண்டு என அவர்  தெரிவித்துள்ளார்.

பூனைகளின் ஒழுங்கான நடத்தையின்மை காரணமாகவும் குழப்பம் காரணமாகவும் கருணையற்ற முறையில் அவை தண்டிக்கப்படுகின்றன. மற்ற விலங்குகளுடன் ஒப்பிடுகையில் பூனை மிகவும் வித்தியாசமான உயிரினமாகும். 

குறிப்பாக ஒரு பூனை அதனது படுக்கையில் இல்லாம் வெளியில் சுற்றிகொண்டு இருந்தால் அது, தனது படுக்கை பாதுகாப்பு இல்லை என்பதையே உணர்த்துகின்றது.

பூனைகள் 20 நிமிடகங்கள் மட்டுமே விளையாடும். ஏனெனில் அந்த  நேரத்தில் மட்டும்தான் அவற்றின் பிரச்சினைகளை அவற்றால் தீரத்துக்கொள்ள முடிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மேற்படி இளைஞர், சென் ஏன்ஸ்ஸில் உள்ள பூனைகள் காப்பகம் ஒன்றிற்கு பல உதவிகளை செய்து வருகின்றார்.

பூனைகளுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஒரு நிகழ்வை ஆரம்பிப்பதே எனது இலக்கு என அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .