2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சுமோ ஆடை ஓட்டப்போட்டி

Kogilavani   / 2014 ஜூலை 23 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலண்டனில் எதிர்வரும் 27 ஆம் திகதி சுமோ ஆடை ஓட்டப்போட்டி ஒன்று நடைபெறுவுள்ளது.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் சுமோ எனப்படும் மிகவும் பாரமான ஆடைகளை அணிந்தவாறு போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சப் சஹாரா ஆப்ரிக்காவில் உள்ள பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவும் முகமாக இலண்டனில் உள்ள பிரபல சுமோ ஆடை தயாரிப்பு நிறுவனம் இந்த ஓட்டப்பந்தயத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இதன்போது, போட்டியாளர்கள் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கும் ஓட வேண்டும் என்றும் ஒரு ஆடை 59 பவுண்ட் என்ற விலையில் கொள்வனவு  செய்து அணிந்துகொள்வது அவசியாகுமாகும் என்றும் அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த வருடமும் இடம்பெற்ற இவ்வாறானதொரு போட்டியில்  உலக  சாதனை நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கிடைக்கப்பெரும் பணம் சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அனுப்படவுள்ளது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில தூங்குவதை தவிர்த்து சிறுவர்களின் படிப்பிற்கு உதவியளிப்பது நல்ல விடயம் என்று தோன்றினால் இப்பந்தயத்தில் கலந்துகொள்ளுங்கள்  என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .