2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வீடு திரும்பிய பூனை

Super User   / 2014 ஜூலை 16 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீட்டைவிட்டு தொலைந்து போன பூனையொன்று மைக்ரோ சிப் ஒன்றின் உதவியுடன் 200 மைல் தூரத்திலிருந்து மீண்டும் வீடு திரும்பிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பூனையானது 18 மாதங்களுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து, கேட்ஸ்ஹெட் பகுதியைச் சேர்ந்த ஜுலியா ஜான்ஸி என்ற பெண் பூனையொன்றை வளர்த்து வந்துள்ளார். அதற்கு பொப் என பெயரிட்டுள்ளார்.

இப்பூனையானது, கடந்த 2012ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தொலைந்து போயுள்ளது.

இதனால் மனமுடைந்த ஜுலியா பூனையை மிகத் தீவிரமாக தேடி வந்துள்ளார். இந்நிலையில், இப்பூனையிடம் காணப்பட்ட மைக்ரோ சிப்பொன்றின் உதவியுடன் பூனை மீண்டும் கிடைக்கப்பெற்றது.

கிறிஸ்மஸ் தினத்தன்று, ஜூலினாவின் வீட்டிற்கு விருந்திற்காக வந்த ஒருவர் பொப்பை அவரது லேய்செஸ்டரில் அமைந்திருக்கும் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார்.  

தொடர்ந்து,  2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வர்த்தகரொருவருக்கு பொப்பை விற்பனை செய்துள்ளார். அந்த வர்த்தகர் பூனையை மிருக வைத்தியரொருவரிடம் அழைத்து சென்றபோதே பொப்பிடம் மைக்ரோ சிப்பொன்று இருப்பது தெரியவந்துள்ளது.

"பொப் மீண்டும் கிடைத்து எனக்கு கனவை போலுள்ளது" என  ஜூலினா தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .