2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

உயிர்த்தெழுந்த குழந்தை

Kogilavani   / 2014 ஜூலை 16 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிரிழந்ததாக வைத்தியர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட 3 வயது குழந்தையொன்று சவப்பெட்டியிலிருந்து உயிருடன் எழும்பிய சம்பவம் பலரை திகைப்படைய செய்துள்ளது.

பிலிப்பைன்ஸ்  நாட்டின் அவுரோரா எனும் நகரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நோய்வாயப்பட்ட மேற்படி குழந்தையானது வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து அடுத்தநாள் குழந்தையை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டனர்.

தேவாலயத்தில் குழந்தையின் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கொண்டிருந்துள்ளன. இதன்போது சவப்பெட்டியில் இருந்த குழந்தை திடீர் என்று கண்விழித்து பார்த்துள்ளது. இதனை கண்ணுற்ற ஒருவர் கிரியைகளை நிறுத்துமாறு சத்தமிட்டுள்ளார்.

அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் குழந்தையை சவப்பெட்டியில் இருந்து தூக்கியெடுத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

"நாம் அனைவரும் அதிர்ச்சியடைந்தோம். கனவு காண்பது போல இருந்தது. அனைவரும் காணொலிகளையும் புகைப்படங்களையும் எடுத்தோம்" என்று குழந்தையின் உறவினர் ஒருவர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .