2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நாயால் பணியிழந்த பணியாளர்கள்

Kanagaraj   / 2014 ஜூலை 09 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


குப்பை அகற்றும் இயந்திரத்தில் நாய் ஒன்றை தூக்கியெறிந்த ஹோட்டல் பணியாளர்கள், பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவமொன்று சைப்பிரஸில் இடம்பெற்றுள்ளது.

சைப்பிரஸ் நாட்டின் புரொட்டராஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்த பணியாளர்களே இவ்வாறு தெருவில் உலாவும் பில்லி என்ற நாயை குப்பை அகற்றும் இயந்திரத்தில் எறிந்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
இந்த ஹோட்டலுக்கு வருகை தந்திருந்த வாடிக்கையாளர்கள், குறித்த நாயை மீட்டு வைத்தயசாலையில் சேர்த்துள்ளனர். இருந்தபோதும் அந்நாய் சில நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளது.

குப்பைத்தொட்டியில் இருந்து நாய் கத்தும் சத்தம் கேட்ட பின்னர் நாயொன்று குப்பைத்தொட்டியில் எறியப்பட்டிருப்பது தங்களுக்கு தெரிய வந்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பில்லி உயிரிழந்ததன் பின்பு சுமார் 2,000 பேர் வரை கையொப்பமிட்டு ஹோட்டலுக்கு எதிராக மனு ஒன்றை தாயாரித்து பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

'நாம் மிகவும் வருந்துகிறோம். நாய்க்கு வாயிருந்தால் அது ஏதாவது கூறியிருக்கும்" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாயானது ஹோட்டலில் உலாவுவதாகவும் நீச்சல் தடாகங்களில் நீந்துவதாகவும் அதனாலேயே அதனை குப்பை அகற்றும் இயந்திரத்தில் எறிந்ததாக ஹோட்டல் பணியாளர்கள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .