2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மனிதனுக்கு செல்லப்பிராணிகளின் உணவு

Kogilavani   / 2014 ஜூலை 09 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


செல்லப்பிராணிகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகள் மனித உணவைப்போன்று ஊட்டச்சத்தானவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, சுமார் ஒரு மாத காலத்திற்கு அவ்வாறான உணவை உட்கொண்டுவரும் பெண்ணொருவர் தொடர்பான செய்தி, அனைவரையும் திசைதிருப்பியுள்ளது.

அமெரிக்காவின், வாஷிங்டனில் செல்லப்பிராணிகளை விற்பனை செய்யும் கடையொன்றை நடத்தி வரும் டெரோத்தி ஹன்ட எனும் பெண்ணே இவ்வாறான வித்தியாசமான செயற்பாடொன்றில் ஈடுபட்டுள்ளார்.

செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை விற்பனை செய்யும் இவர், விற்பனை செய்யும் உணவுகள் மிகவும் சத்துமிக்கவை என்றும் அதனை மனிதர்களும் உட்கொள்ள ணிடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை மக்களுக்கு உறுதிப்படுத்தும் வணிகமாகவே கடந்த ஜூன் 19ஆம் திகதி முதல் தனது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு செல்லப்பிராணிக்காக தயாரிக்கப்படும் உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றார்.

இதில் பூனை உணவு ஒன்றையும் நாய் உணவு ஒன்றையும் தனது விருப்பத்திற்குறிய உணவாக தேர்தெடுத்துள்ளார். அவை தெரிவு செய்யப்பட்ட மிகவும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள்.

'நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக தயாரிக்கப்படும் உணவுகள் மனித உணவுகளை விட மிகவும் ருசியானவை. என்னை பார்க்க அனைவருக்கும் பைத்தியக்காரத்தனமான செயற்பாடு என்று சொல்லத்தோன்றும்.

ஆனாலும் நாம் தெரிவுசெய்யும் உணவுகள் ஊட்டச்சத்து மிக்கவையா என்பதையும் அது நாய், பூனை உணவாக இருந்தாலும் மனித உணவாக இருந்தாலும் உணவுகளில் உள்ள லேபல்களை வைத்து கொள்வனவு செய்ய வேண்டும் என்பதை மக்களுக்கு உறுதிப்படுத்தவே நான் இவ்வாறான செயற்பாட்டை வெளிப்படுத்தியுள்ளேன் என்று அவர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .